கிராம்பிரியா

கிராம்பிரியா (Gramapriya) என்பது ஒரு இந்திய கோழி இனமாகும். இது ஐதராபாத்தை அடிப்படையாகக் கொண்ட கோழிப்பண்ணை இயக்குநரக திட்டத்தால் உருவாக்கப்பட்டது .[1] இந்த கிராம்ப்பிரியா கோழி தன் 175 நாள் வயதில் முட்டையிடத் துவங்குகிறது.  72 வாரங்களில் 200–225 முட்டைகள் வரை இடும்.[2][3]

கிராமப்பிரியா கோழி இந்திய அரசால் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ஐதராபாத்தைச் சார்ந்த திட்டத்தின் வழியாக உருவாக்கப்பட்ட ஒரு கலப்பின கோழி ஆகும். கிராம்ப்பிரியா கோழிகள் கொல்லைப்புற வளர்ப்புக்காக உருவாக்கப்பட்டவை. இவை இந்திய விவசாயிகள் மத்தியில் உயர்ந்த மதிப்பைக் கொண்டவையாக உள்ளன.

கிராம்ப்பிரியா கோழி இறைச்சி தந்தூரி வகை உணவுகளை தயாரிக்க மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

கிராமப்பிரியாவில் இரண்டு வகைகள் உள்ளன:

  • வெள்ளை வகை: - நல்ல முட்டை உற்பத்திக்கு.
  • வண்ணமயன இனம்: - இரட்டை நோக்கத்துக்காக வளர்க்கப்படுகின்றன.  இதில் வெள்ளை இனத்தைவிட முட்டைகள் எண்ணிக்கை குறைவாகவே கிடைக்கும். இதன் தனித்தன்மைகளாக உள்ளவை: பல வண்ண இறகு முறை, நீண்ட தாடி, குறைந்து வேட்டையாடும் அச்சுறுத்தல், இயல்பான உடல் எடையளவு, சிறந்த முட்டை உற்பத்தி, பழுப்பு நிற ஓடுடைய முட்டைகள் போன்றவை ஆகும்

மேற்கோள்கள்

  1. "ഗ്രാമപ്രിയക്കും വനരാജനും പിന്നാലെ ഇനി കാവേരി കോഴികളും | mangalam.com". Test.mangalam.com (2012-08-07). பார்த்த நாள் 2012-11-17.
  2. "വിവിധ ഇനം കോഴികൾ". Farmextensionmanager.com. பார்த்த நாள் 2012-11-17.
  3. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். "". மூல முகவரியிலிருந்து April 2, 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் October 2, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.