சிறீவிஜயம்

சிறீவிஜயம் (Srivijaya) என்பது சுமாத்திரா தீவை மையமாகக் கொண்ட பழைய மலாயப் பேரரசாகும். தென்கிழக்காசியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் இது பரவியிருந்தது. இந்த அரசு இருந்ததிற்கான ஆதாரம் 7ம் நூற்றாண்டில் இருந்தே கிடைக்கிறது. சீன பௌத்த துறவியான யி ஜிங் தான் சிறீவிஜயத்தி்ல் கி.பி 671 இல் 6 மாதங்கள் இருந்ததாக குறிப்பிடுகிறார். சுமாத்திராவி்ல் பலெம்பாங் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் சிறீவிஜயம் என்ற பெயர் காணப்படுகிறது. இது 683ல் எழுதப்பட்டதாகும். பல்வேறு காரணங்களால் 13ம் நூற்றாண்டில் இப்பேரரசு அழிவுற்றது. அக்காலத்தி்ல் ஜாவா தீவை மையமாகக் கொண்ட மஜாபாகித் அரசின் விரிவாக்கமும் ஒரு காரணமாகும். 8 - 12ம் நூற்றாண்டுகளி்ல் இவ்வரசு பௌத்த மதம் பரவுதலின் முதன்மையான மையமாக விளங்கியது.

சிறீவிஜயப் பேரரசு
7ம் நூற்றாண்டு–13ம் நூற்றாண்டு
சிறீவிஜயப் பேரரசு அமைவிடம்
8ம் நூற்றாண்டில் பரவியிருந்த சிறீவிஜயத்தின் பரப்பு
தலைநகரம் பலேம்பாங் , ஜாம்பி, சய்யா
மொழி(கள்) பழைய மலாய், சமசுகிருதம்
சமயம் இந்து, பௌத்தம்
அரசாங்கம் முடியாட்சி
மன்னன்
 -  தோராயமாக 683 ஜெயநேசன்
 - தோராயமாக 775 தர்மசேது
 - தோராயமாக 792 சமரதுங்கன்
 - தோராயமாக 835 பாலபுத்திரன்
 - தோராயமாக 988 சிறீ குலமணிவர்மதேவன்
வரலாற்றுக் காலம் மத்திய காலம்
 - உருவாக்கம் 7ம் நூற்றாண்டு
 - குலைவு 13ம் நூற்றாண்டு
நாணயம் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள்
இது இந்தோனேசிய வரலாறு
தொடரின் ஒரு பகுதி
மேலும் பார்க்க:
காலக்கோடு

வரலாற்றுக்கு முன்
பண்டைய அரசுகள்
குத்தாய் (4ஆம் நூற்றாண்டு)
தருமாநகாரா (358–669)
கலிங்கம் (6ஆம்–7ஆம் நூற்றாண்டுகள்)
சிறீவிஜயம் (7ஆம்–13ஆம் நூற்றாண்டுகள்)
சைலேந்திரர் (8ஆம்–9ஆம் நூற்றாண்டுகள்)
சுண்டா அரசு (669–1579)
மெடாங்க அரசு (752–1045)
கேடிரி (1045–1221)
சிங்காசாரி (1222–1292)
மயாபாகித்து (1293–1500)
முஸ்லிம் அரசுகளின் எழுச்சி
இஸ்லாத்தின் பரவல் (1200–1600)
தெர்னாத்தே சுல்தானகம் (1257–தற்காலம்)
மலாக்கா சுல்தானகம் (1400–1511)
தெமாகு சுல்தானகம் (1475–1548)
அச்சே சுல்தானகம் (1496–1903)
பந்தன் சுல்தானகம் (1526–1813)
மத்தாராம் சுல்தானகம் (1500கள்–1700கள்)
ஐரோப்பியக் குடியேற்றவாதம்
போர்த்துக்கேயர் (1512–1850)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942)
இந்தோனேசியாவின் தோற்றம்
தேசிய விழிப்புணர்வு (1908–1942)
யப்பானிய ஆக்கிரமிப்பு (1942–45)
தேசியப் புரட்சி (1945–50)
இறைமையுள்ள இந்தோனேசியா
தாராளமய மக்களாட்சி (1950–57)
வழிகாட்டப்பட்ட மக்களாட்சி (1957–65)
புத்தாக்கத்தின் தொடக்கம் (1965–66)
புத்தாக்கம் (1966–98)
இந்தோனேசிய மறுமலர்ச்சி (1998–தற்காலம்)

இப்பேரரசின் அழிவிற்குப்பிறகு இது முற்றிலும் மறக்கப்பட்டது. தென்கிழக்காசியாவில் இப்பேரரசு இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் கணக்கில் கொள்ளவேயில்லை. 1918 இல் பிரெஞ்சு தூர கிழக்கு பள்ளியின் பிரெஞ்சு வரலாற்று ஆய்வாளர் ஜார்சு என்பார் இப்பேரரசு இருந்திருக்கும் என சொன்னதன் பின்பே இப்பேரரசு இருந்திருக்கும் என அதிகாரபூர்வமாக சந்தேகிக்கப்பட்டது. 1993 இல் சுமாத்திரா தீவின் மூசி ஆற்றங்கரையில் பலெம்பாங் என்ற இடத்தில் இப்பேரரசின் தலைநகரம் இருந்திருக்கும் என நிரூபிக்கப்பட்டது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.