சியாக் சுல்தானகம்
சியாக் சுல்தானகம் (Indonesian: Kesultanan Siak Sri Inderapura) இன்றைய இந்தோனேசியாவின் ரியாவு மாநிலத்திலுள்ள சியாக் பிராந்தியத்தில் 1723 முதல் 1946 வரை நிலைத்திருந்த இசுலாமிய அரசாகும். இது பகாருயுங் இராச்சியத்தைச் சேர்ந்த ராஜா கெச்சிக் எனப்பட்ட சுல்தான் முதலாம் அப்துல் ஜலீல் ரஹ்மத் ஷாஹ் என்பவரால் ஜொகோர் சுல்தானகத்தின் சிம்மாசனத்தைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியுற்ற பின்னர் தோற்றுவிக்கப்பட்டது.
சியாக் சுல்தானகம் | |||||
| |||||
தலைநகரம் | புவாந்தான், மெம்புரா, செனாபெலான், பெகான்பாரு, சியாக் ஸ்ரீ இந்திரபுரா | ||||
மொழி(கள்) | மலாய் | ||||
சமயம் | இசுலாம் | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
சுல்தான் | |||||
- | 1725-1746 | சுல்தான் முதலாம் அப்துல் ஜலீல் ரஹ்மத் ஷாஹ் | |||
- | 1915-1949 | சுல்தான் அல்-சையித் சரீப் இரண்டாம் காசிம் அப்துல் ஜலீல் சைபுத்தீன் (இரண்டாம் சரீப் காசிம்) | |||
வரலாறு | |||||
- | நிறுவப்பட்டது | 1725 | |||
- | இந்தோனேசியக் குடியரசுடன் இணைந்தது | 1946 | |||

சியாக் சுல்தானும் அவரது மனைவியும் (1910-1939)
1945 ஓகத்து 17 ஆம் திகதி இந்தோனேசிய சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், சியாக் சுல்தானகத்தின் கடைசி மன்னரான சுல்தான் இரண்டாம் சரீப் காசிம் தன்னுடைய அரசு இந்தோனேசியக் குடியரசுடன் இணைவதாக அறிவித்ததுடன் சியாக் சுல்தானகம் தனிநாடாயிருப்பது முடிவுக்கு வந்தது.
சியாக் சுல்தான்கள்
- சுல்தான் முதலாம் அப்துல் ஜலீல் ரஹ்மத் ஷாஹ் (1725–1746)
- சுல்தான் இரண்டாம் அப்துல் ஜலீல் ரஹ்மத் ஷாஹ் (1746–1765)
- சுல்தான் அல்துல் ஜலீல் ஜலாலுத்தீன் ஷாஹ் (1765–1766)
- சுல்தான் அப்துல் ஜலீல் அலாமுத்தீன் ஷாஹ் (1766–1780)
- சுல்தான் முகம்மது அலீ அப்துல் ஜலீல் முஅஸ்ஸம் ஷாஹ் (1780–1782)
- சுல்தான் யஹ்யா அப்துல் ஜலீல் முளப்பர் ஷாஹ் (17821784)
- சுல்தான் அல்-சையித் சரீப் அலீ அப்துல் ஜலீல் சைபுத்தீன் பாஅலவீ (1784–1810)
- சுல்தான் அல்-சையித் சரீப் இப்றாகீம் அப்துல் ஜலீல் கலீலுத்தீன் (1810–1815)
- சுல்தான் அல்-சையித் சரீப் இசுமாஈல் அப்துல் ஜலீல் ஜலாலுத்தீன் (1815–1854)
- சுல்தான் அல்-சையித் சரீப் முதலாம் காசிம் அப்துல் ஜலீல் சைபுத்தீன் (முதலாம் சரீப் காசிம் I, 1864–1889)
- சுல்தான் அல்-சையித் சரீப் ஹாசிம் அப்துல் ஜலீல் சைபுத்தீன் (1889–1908)
- சுல்தான் அல்-சையித் சரீப் இரண்டாம் காசிம் அப்துல் ஜலீல் சைபுத்தீன் (இரண்டாம் சரீப் காசிம்), (1915–1949)
மேலும் பார்க்க
- பகாருயுங் அரசு
- ஜொகோர் சுல்தானகம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.