சாலியர்

சாலியர் (Saliyar அல்லது Saliya) எனப்படுவோர் தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் செய்து வரும் இந்த சாதியினர் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கேரளா மற்றும் கருநாடகா ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

சாலியர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கேரளா, கருநாடகம், தமிழ்நாடு
மொழி(கள்)
மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பத்மசாலியர், தேவாங்கர், பட்டாரியர்

தமிழகத்தில் வாழும் பகுதிகள்

இவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராசபாளையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி-சக்கம்பட்டி பகுதியிலும், அருகிலுள்ள டி. சுப்புலாபுரம் பகுதியிலும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பான்மையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இவர்களின் இன்னொரு பிரிவு பத்மசாலியர் என்று அழைக்கப்படுகிறது. பத்மசாலியர் தங்களை பத்மபிராமின் என்று அழைக்கிறார்கள்.

மேலும் தமிழக சாலியர் காஞ்சிபுரத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். அதற்கும் முன்பாக ஆந்திரத்திலிருந்து வந்தவர்கள்.

ஆனால் இவர்களின் பூர்வீகம் காசி எனப்படும் வாரணாசி ஆகும். பிறகு பஞ்சாப்பில் உள்ள சாலியன்வாலாபாக் நகரில் வசித்தனர். பின்பு அப்பெயர் ஜாலியன்வாலா பாக் என மருவிற்று. இந்த நகரில் இன்றும் சாலியர் பெயரில் வீதி உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இஸ்லாமிய படையெடுப்பின் போது தெற்கில் இடம்பெயர்ந்தனர்.

தற்போது தெற்கில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, திருநெல்வேலி, ஈரோடு பகுதிகளில் வசிக்கின்றனர். பெரும்பாலும் நெசவுத் தொழிலை முதன்மையாக மேற்கொண்டாலும், தொழில் நசிவு காரணமாக பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

சிங்கள சாலியர்

இலங்கையிலுள்ள சிங்களவர்களிலும் சாலியர் என்னும் ஒரு சாதியினர் உள்ளனர். இவர்களின் முன்னோர்கள் தமிழகத்திலிருந்து வந்து இலங்கையில் குடியேறிய சாலியர் ஆவர். சிங்கள மொழியையே முதன்மொழியாகப் பேசும் இவர்கள் சிங்கள இனத்துக்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டுவிட்ட தமிழர்கள் ஆவர். இலங்கையிலுள்ள பேருவளைப் பகுதியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வர்த்தகரின் உதவியினாலேயே இவர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது.

நேச நாயனார்

கி.பி 400 முதல் 1000 வரையுள்ள ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார்கள் எனப் போற்றப்படுகின்றார்கள். இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நேச நாயனார் சாலியர் ஆவார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.