பத்மசாலியர்
பத்மசாலியர் தமிழக அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளில் ஒன்று.
சாலியர், பட்டு சாலியர், பட்டாரியர், செளராஷ்டிரர்கள் வரிசையில் இடம் பெறும் இவர்கள் அச்சாதியினரைப்போலவே நெசவுத் தொழில் செய்பவர்கள்.[1] தெலுங்கினைத் தாய்மொழியாய்க் கொண்ட இவர்கள் கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழகத்தில் நுழைந்து தமிழகம் முழுக்க பரவியுள்ளனர். ஆந்திராவில் இவர்களை பத்மபிராமின் என்றும் அழைப்பார்கள். மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி ஸ்வாமியின் மனைவியான பத்மாவதி அம்மாள் இவர்கள் இனத்தவர் தான் என்று திருப்பதி தேவஸ்தானமும் ஒப்புக்கொண்டுள்ளது. புராண இதிகாசப்படி விஷ்ணுவின் வம்சாவளி வந்தவர்கள் இவர்கள். 108 ரிஷிகளின் மூலம் வம்ச விருத்தி ஆனவர்கள். 108 கோத்திரங்கள் இவர்களிடம் உண்டு. தங்கமங்கை என்றழைக்கப்படுகிற பி.டி உஷா இந்த இனத்தைச் சேர்ந்தவர் தான்.
தற்போது தெற்கில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், காஞ்சீபுரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, திருநெல்வேலி, ஈரோடு பகுதிகளில் வசிக்கின்றனர். பெரும்பாலும் நெசவுத் தொழிலை முதன்மையாக மேற்கொண்டாலும் தொழில் நசிவு காரணமாக பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.