கௌமாரம்

கௌமாரம் முருகனை முழு முதற் கடவுளாக கொண்ட சமயமாகும். குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்ப வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற சமயக் கோட்பாட்டை உடையது. ஆதிசங்கரர் உருவாக்கிய (6)ஷண்மதங்களில் இதுவும் ஒன்றும். (6) ஷண்மதங்களாவன: கணபதி வழிபாடு காணாபத்தியம், சிவ வழிபாடு சைவம், விஷ்ணு வழிபாடு வைணவம், சூரிய வழிபாடு சௌரம், அம்மன் வழிபாடு சாக்தம், முருக வழிபாடு கெளமாரம்.[1]

பெயர் காரணம்

கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் இச்சமயம் கௌமாரம் எனப் பெயர் பெற்றது.[2]

மேற்கோள்கள்

  1. http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314223.htm
  2. கலைக்களஞ்சியம், 351 -353, கௌமாரம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.