சௌரம்

EZHAL ARSAN சூரியனை முழு முதற் வழிபடுகடவுளாகக் கொள்வது சௌர சமயமாகும். பேரொளி வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்று கூறுவது இச்சம கருத்தாகும். சிலர் நான்முகனான பிரம்மனை வழிபடுவது சௌரம் என்றும் கூறுகின்றனை. காரணம் சௌரம் என்றால் நான்கு என ஒரு பொருள் உண்டு. அனால் சௌரம் என்பது சூரியனைக் குறிக்கும். ஏனெனில் பஞ்சாங்களில் சூரியனின் சஞ்சாரத்தை வைத்துக் கணக்கிடுவதை சௌரமானம் என்றும் சந்திரனின் நிலையை வைத்துக் கணக்கிடுவதை சாந்திரமானம் என்று கூறுவார்கள். நா.கதிரை வேற்பிள்ளை தமிழ் மொழி அகராதியிலும் சௌரம் என்ற வார்த்தைக்கு சூரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சூரியனுக்கு உள்ள கோவில்களில் குறிப்பிடத்தகுந்தது கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவில் தலம்.  இந்த ஆலயத்தை கட்டுவித்தவர் முதலாம் குலோத்துங்க சோழ மன்னர் (1079 -1120).  சூரியக் கடவுள் " கொடிநிலை"  என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது.  சிலப்பதிகாரத்தில் சூரிய கோவில் " உச்சி கிழான் கோட்டம் " என்ற பெயரால் குறிக்கப் பெறுகிறது.  உலகில் எழுந்த பழமையான நூலான ரிக் வேதத்தில் சூரிய வழிபாடு குறிக்கப் பட்டிருக்கிறது.  சௌராஷ்டிரம் என்ற பாரத வர்ஷத்தின் ஐம்பத்தி இரண்டு நாடுகளில் ஒன்று சூரிய வழிபாட்டின் அடிப்படையில் எழுந்த பெயராகும்.

ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா முதலிய நாடுகளில் சிதைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் உள்ளன

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.