கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து

கோல்ட் கோஸ்ட் (Gold Coast) ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது அடர்த்தி கூடிய நகரங்களில் மாநிலத்தில் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவில் ஆறாவது இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலியாவின் முக்கிய சுற்றுலா நகரம் இதுவாகும். சூடான உப அயனமண்டலக் காலநிலை, அலைச் சறுக்கு கடற்கரைகள், கால்வாய் மற்றும் நீர்நிலைகள், இரவுக்கேளிக்கைகள், மழைக்காட்டு பின்னிலம் போன்றவை இந்நகரின் சிறப்பு அம்சங்களாகும்.

கோல்ட் கோஸ்ட்
குயின்ஸ்லாந்து

சேர்ஃபேர்ஸ் பரடைஸ்
மக்கள் தொகை: 402,648 (2006) [1] (6வது)
அடர்த்தி: 972/கிமீ² (2,517.5/சதுர மைல்)
பரப்பளவு: 414.3 கிமீ² (160.0 சது மைல்)
நேர வலயம்: AEST (UTC+10)
அமைவு:
உள்ளூராட்சிகள்:கோல்ட் கோஸ்ட் நகரம்
சராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி
25.1 °செ
77 °
17.2 °செ
63 °
1,218.2 அங்

வரலாறு

கியூ1 கட்டடம்
பேர்லி ஹெட்சு, 1939 வாக்கில்

1770 மே 16 இல் கப்டன் ஜேம்ஸ் குக் எச்.எம்.எசு. எண்டெவர் கப்பலில் முதன் முதலில் இங்கு வந்திறங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவார். நாடுகாண் பயணி கப்டன் மத்தியூ பிலிண்டேர்ஸ் நியூ சவுத் வேல்ஸ் குடியேற்ற நாட்டின் வடக்கில் இருந்து ஆஸ்திரேலிய கண்ட வரைபடத்தை வரையப் புறப்பட்ட போது 1802 ஆம் ஆண்டில் கோல்ட் கோஸ்டைக் கடந்தார். மொரிட்டோன் குடா தடமுகாமில் இருந்து தப்பிய குடியேற்றக் குற்றவாளிகள் இப்பிரதேசத்தில் பதுங்கியிருந்தனர். 1823 ஆம் ஆண்டு நாடுகாண் பயணி ஜோன் ஒக்ஸ்லி என்பவர் இங்கு வந்திறங்கும் வரை ஐரோப்பியர்கள் இங்கு பெருமளவு குடியேறவில்லை.

இக்கடல்நிலப்பகுதியில் மிகுந்து காணப்பட்ட இந்திய வேம்பு வகை (செவ்வகில் (red cedar) மரங்கள் 1800களின் நடுப்பகுதியில் மக்களை இங்கு ஈர்க்க ஆரம்பித்தது. இப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியான நெராங்கு என்ற இடத்தில் இதற்கான மூலவளம் இருப்பது கண்டறியப்பட்டு அங்கு இம்மரவகைகள் உண்டாக்கப்பட்டன. பின்னர் 1875 ஆம் ஆண்டில் சவுத்போர்ட் என்ற இடம் பிறிஸ்பேன் நகர உயர்குடி மக்களுக்கான சுற்றுலா இடமாகத் தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டது. இது பின்னர் கோல்ட் கோஸ்ட் என்ற பெயரில் மிக விரைவாக சுற்றுலாத் தளமாக விரிவாக்கப்பட்டது. இதற்கு கோல்ட் கோஸ்ட் என்ற பெயர் எப்படி உருவானது என்பதற்கு சரியான விளக்கம் இதுவரை தரப்படவில்லை. 1958 ஆம் ஆண்டில் சவுத்போர்ட், கூலங்கட்டா ஆகிய இடங்களை உள்ளடக்கிய பகுதிக்கு கோல்ட் கோஸ்ட் என்ர பெயர் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது.

1981 இல் கூலங்கட்டாவில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் இப்பிரதேசத்தின் மக்கள்தொகை ஆஸ்திரேலியாவில் ஆறாவது இடத்தைப் பிடித்தது[2].

அடிக்குறிப்புகள்

  1. Australian Bureau of Statistics (25 அக்டோபர் 2007). "Gold Coast-Tweed Heads (Gold Coast Part) (Urban Centre/Locality)". 2006 Census QuickStats. பார்த்த நாள் 7 October 2009.
  2. Gold Coast sixth largest city

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.