கொற்றிகோடு

கொற்றிகோடு (Kotticode or Kotticodu) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில்குமாரபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊர்.

  கிராமம்  
கொற்றிகோடு
இருப்பிடம்: கொற்றிகோடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°17′49″N 77°19′28″E
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே, இ. ஆ. ப.
மக்கள் தொகை 5,000 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
கொற்றிக்கோடு மீட் நினைவு சி எஸ் ஐ தேவாலயம்‎

கொற்றிகொட்டில் அரசு ஆரம்ப பாடசாலை ஒன்று உள்ளது. அதே போல் சி எஸ் ஐ மீட் நினைவு ஆங்கில ஆரம்ப பாட சாலையும் உள்ளது.[3] கொற்றிகோடு காவல் நிலைய பகுதிகள் கோதநல்லூர் கிராமத்திற்கு உட்பட்ட கோதநல்லூர், சாரல் விளை , ஈத்தவிளை, சாமிவிளை, மேக்கா மண்டபம் , செம்பருத்தி விளை ,கொற்றிகோடு , முட்டைகாடு, குமாரபுரம், மணலிக்கரை, மாறன்கோணம், முண்டவிளை ,வளுக்கலாம்பாடு, பூவங்காபிறம்பு, மருவூர்கோணம், ஆற்றுகோணம் ஆகிய பகுதிகளும். வேளிமலை கிராமத்திற்கு உட்பட்ட வேளிமலை ,கூழக்கடை, கரும்பாறை, பெருஞ்சிலம்பு, பண்ணிபொத்தை ஆகிய ஊர்களும் அடங்கும்.[4] கொற்றிகோடு மீட் நினைவு சி எஸ் ஐ திருச்சபையும் கொற்றிகொட்டில் இருக்கும் முக்கியமான வழிபாட்டு இடமாகும். .

அரசு நடுநிலை பள்ளி

அரசு நடுநிலை பள்ளி இங்கே அமைந்துள்ளது இங்கு ஓன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இங்கே மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியானது கொற்றிகோடு சி.எஸ்.ஐ ஆலயத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் அமைந்துள்ளது. இங்கே சுமார் 300 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

பெயர் காரணம்

இந்த ஊரில் வாழ்ந்த மறவரின மக்கள் பலைநிலத்திற்குறிய கொற்றவை(காளி) தெய்வத்தை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். சீர்திருத்த கிறித்துவத்தை சார்ந்த சார்லஸ் மீட் அவர்கள் இந்த பகுதியில் கிறித்துவத்தை பற்றி போதித்த பின்னர் இந்த மக்கள் மனம் மாறி கிறித்துவத்தை ஏற்று கொண்டதாகவும். அதன் விளைவாக கொற்றவை வழிபாட்டை கோடு போட்டு நிறுத்தியதால் இந்த ஊரின் பெயர் கொற்றவை கோடு என்று மாறியிருக்கிறது. பின்னர் கொற்றவை கோடு காலபோக்கில் மருவி கொற்றிகோடு என்று மாறியதாக ஒரு கருத்து நிலவுகிறது. மலையும் மலை சார்ந்த இடமும் என்பதால் கோடு என்பது மலை குன்றுகளை குறிப்பதால் கொற்றவர்கள் கோடு என்று பெயர் வந்தது என்றும் பின்னர் அது மருவி கொற்றிகோடு என்று ஆனது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

கோடு என்ற பெயர் சரியாக பொருந்துவது கொற்றிகோட்டிற்கு மட்டும் தான்.சங்க இலக்கியத்தில் குறிப்பிட பட்டுள்ள குமரி கோடு என்பது கொற்றிகோடு தான்.கொற்றவை கோடு மருவி கொற்றிகோடு ஆனது. கொற்றிகோடு மலை ( அதாவது பிற்காலத்தில் முருகன் வேள்வி கொண்டதால் வேள்வி மலையாகி பின்னர் வேளிமலை என்று அழைக்கபடுகிற) கொற்றிகோடு மலை தான் குமரி கண்டம் அழிந்த போது குமரி கோடாக இருந்த மலை..

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. குமரி மாவட்ட தனியார் பள்ளிகள் விபரம்
  4. கொற்றிகோடு காவல் நிலைய பகுதிகள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.