கேமரன் வைட்
கேமரூன் லியோன் ஒயிட் (Cameron Leon White பிறப்பு: ஆகஸ்ட் 18, 1983) ஒரு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய இருபது 20 மற்றும் விக்டோரியன் புஷ்ரேஞ்சர்ஸ் துடுப்பாட்ட அணியின் தலைவர் ஆவார். நடுத்தர வரிசை மட்டையாளர் மற்றும் வலது கை சுழற்பந்து பந்து வீச்சாளர், வைட் 2000-01ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விக்டோரியன் புஷ்ரேஞ்சர்ஸ் அணி சார்பாக இவர் அறிமுகமானார். விக்டோரியா அணியின் வீரர் ஷேன் வார்னுடனான ஆரம்பகாலங்களில் இவர் ஒப்பிடப்பட்டார். ஆத்திரேலியா விக்டோரியா பிராந்தியத்தில் பிறந்த இவர் ஆத்திரேலியா தேசிய அணி, ஆத்திரேலியா துடுப்பாட்ட ஏ, சமர்செட் அணி, ரோயல் செலஞ்சர்ஸ் அணி டெக்கன் சார்ஜஸ், விக்டோரியா பிராந்திய அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.
கமரூன் வைட் | |||||||||
![]() |
![]() | ||||||||
இவரைப் பற்றி | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கமரூன் லியோன் வைட் | ||||||||
பட்டப்பெயர் | பொன்டி | ||||||||
பிறப்பு | 18 ஆகத்து 1983 | ||||||||
விக்டோரியா, ஆத்திரேலியா | |||||||||
உயரம் | 1.87 m (6 ft 1 1⁄2 in) | ||||||||
வகை | துடுப்பாட்டம் | ||||||||
துடுப்பாட்ட நடை | வலதுகை | ||||||||
பந்துவீச்சு நடை | இடதுகை கூக்ளி | ||||||||
அனைத்துலகத் தரவுகள் | |||||||||
முதற்தேர்வு (cap 402) | அக்டோபர் 9, 2008: எ இந்தியா | ||||||||
முதல் ஒருநாள் போட்டி (cap 152) | அக்டோபர் 5, 2005: எ ICC உலகம் XI | ||||||||
கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 6, 2011: எ இங்கிலாந்து | ||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||
1999–இன்று | விக்டோரியா பிராந்தியம் | ||||||||
2007-2010 | ரோயல் செலஞ்சர்ஸ் | ||||||||
2011-present | டெக்கன் சார்ஜஸ் | ||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||
தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | ||||||
ஆட்டங்கள் | 4 | 79 | 113 | 193 | |||||
ஓட்டங்கள் | 146 | 1,947 | 6,933 | 5,018 | |||||
துடுப்பாட்ட சராசரி | 29.20 | 36.73 | 42.01 | 35.58 | |||||
100கள்/50கள் | 0/0 | 2/11 | 16/32 | 6/31 | |||||
அதிக ஓட்டங்கள் | 46 | 105 | 260* | 126* | |||||
பந்து வீச்சுகள் | 558 | 325 | 11,820 | 3,712 | |||||
இலக்குகள் | 5 | 12 | 172 | 92 | |||||
பந்துவீச்சு சராசரி | 68.40 | 28.75 | 40.37 | 35.78 | |||||
சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 2 | 0 | |||||
ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 1 | n/a | |||||
சிறந்த பந்துவீச்சு | 2/71 | 3/5 | 6/66 | 4/15 | |||||
பிடிகள்/ஸ்டம்புகள் | 1/– | 36/– | 107/– | 86/– | |||||
பிப்ரவரி 16, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
2003 ஆம் ஆண்டில் இவர் விக்டோரியாத் துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது இவரின் வயது 20 ஆகும்.இதன்மூலம் மிக இளம் வயதில் அந்த அணியின் தலைவராக நியமனம் பெற்றவர் எனும் பெருமை பெற்றார். 2005 ஆம் ஆண்டு முதல் இவர் பரவலாக அரியப்பட்டார். இருந்தபோதிலும் சில போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். மேலும் அப்போதைய அணியின் தலைவரான ரிக்கி பாண்டிங் இவர் முன்னணிப் பந்துவீச்சாளராக ஆக வேண்டும் எனில் இன்னும் திறமையினை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். மேலிம் இங்கிலாந்து மாகாணப் போட்டிகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதன் விளைவாக இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தேர்வாளர்களால் ஈர்க்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்ட போட்டித் தொடரில் இவர் தேர்வானார்.
2012 ஆம் ஆண்டு வரை இவர் இருபது20 போட்டித் தலைவராக இருந்தார். பிக்பாஷ் லீக்கில் இவர் மோசமான திறனை வெளிப்படுத்தியதன் மூலம் இவர் தலைவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சார்பாக விளையாடிய போது இவருக்கு பியர் எனும் புனைப் பெயர் வந்தது.
சர்வதேச போட்டிகள்
தேர்வுத் துடுப்பாட்டம்
2008 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .அக்டோபர் 9, பெங்களூரு சின்னசுவாமி துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இந்தியயத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 13 பந்துகளில் ஆறு ஓட்டங்களை எடுத்து சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 13 ஓவர்களை வீசி 39 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் இரண்டு ஓவர்களை மெய்டனாக வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இரண்டாவது ஆட்டப் பகுதியில் 14 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டிசமனில் முடிந்தது.[1] 2008 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .நவம்பர் 6, நக்பூர் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இந்தியயத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நன்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியியின் முதல் ஆட்டப் பகுதியில் 133 பந்துகளில் 46 ஓட்டங்களை எடுத்து ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 10 ஓவர்களை வீசி 24 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இரண்டாவது ஆட்டப் பகுதியில் இரண்டு ஓவர்களை வீசி 15 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணி 172 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[2]
சான்றுகள்
- "Full Scorecard of India vs Australia 1st Test 2008 - Score Report | ESPNcricinfo.com" (en).
- "Full Scorecard of India vs Australia 4th Test 2008 - Score Report | ESPNcricinfo.com" (en).