குட்டால்

டேம் ஜேன் குட்டால் (Jane Goodall, பிறப்பு: ஏப்ரல் 3, 1934) என்னும் ஆங்கிலேயப் பெண்மணியார், சுமார் 45 ஆண்டுகளாக மனிதரை ஒத்த குரங்கினமாகிய சிம்ப்பன்சியைப் பற்றி உற்று ஆய்ந்திருக்கிறார். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள தான்சானியாவில் உள்ள கோம்பி ஸ்ட்ரீம் நாட்டுப் புரவுக்காட்டில் (Gombe Stream National Park) இயக்குநராகப் பணி புரிந்து வந்திருக்கிறார். இவர் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதிக்கான தூதரும் ஆவார்.

ஜேன் குட்டால்

சேன் குட்டால்.
பிறப்பு ஏப்ரல் 3, 1934
வதிவுஇங்கிலாந்து, தான்சானியா
தேசியம் ஐக்கிய இராச்சியம்
துறைBiologist, Primatologist, Conservationist
Alma materகேம்பிரிட்ச் பல்கலைக்கழகம்
முக்கிய மாணவர்.
அறியப்பட்டதுசிம்ப்பன்சிகள் பற்றிய ஆய்வு, conservation
பரிசுகள்DBE (2004)

புகழ் பெற்ற தொல்லுயிரியல் ஆய்வாளர் முனைவர் லீக்கி அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், இவர் ஆற்றிய அரிய ஆய்வுகளுக்காக இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்தை 1964ல் அளித்தது.

இளமைப் பருவம்

சேன் குட்டால் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் 1934 ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் பிறந்தார். இவருடைய இரண்டாம் பிறந்த நாளின் போது இவரது தந்தை இவருக்கு ஒரு குரங்கு பொம்மையைப் பரிசளித்தார். இந்த பொம்மையை குட்டால் மிகவும் விரும்பினார். இந்நாள் வரை இப்பொம்மையை இவர் பாதுகாத்து வைத்திருக்கிறார்.[1]

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Jane Goodall — Childhood" (ஆங்கிலம்). Jane Goodall Institute. பார்த்த நாள் பிப்ரவரி 1, 2008.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.