கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம்(University of Cambridge) என்பது இங்கிலாந்தில், கேம்பிரிட்ச் என்னும் ஊரில் அமைந்துள்ள தொல்முதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் சுமார் கி.பி. 1209-இல் தொடங்கப்பட்டிருக்கும் என கணிக்கின்றனர். ஆங்கிலம் பேசும் நாடுகளில் இதுவே இரண்டாவது தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் எனக் கருதப்படுகின்றது மற்றும் செயல்பாட்டில் இருக்கும் மூன்றாவது தொன்மைவாய்ந்த பல்கலைக்கழகம் எனவும் கூறப்படுகிறது.[5]
![]() | |
இலத்தீன்: Universitas Cantabrigiensis | |
குறிக்கோளுரை | Hinc lucem et pocula sacra (இலத்தீன்) |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Literal: From here, light and sacred draughts Non-literal: இந்த இடத்திலிருந்து , நாம் ஞானம் மற்றும் விலைமதிப்பற்ற அறிவு பெறுவோம் |
வகை | Public, (The colleges are private insitutions) |
உருவாக்கம் | c. 1209 |
நிதிக் கொடை | £4.9 billion (2013, incl. colleges)[1] |
வேந்தர் | The Lord Sainsbury of Turville |
துணை வேந்தர் | Sir Leszek Borysiewicz |
கல்வி பணியாளர் | 5,999[2] |
நிருவாகப் பணியாளர் | 3,142[2] |
மாணவர்கள் | 18,448[2] |
பட்ட மாணவர்கள் | 12,077[2] |
உயர் பட்ட மாணவர்கள் | 6,371[2] |
அமைவிடம் | கேம்பிரிட்ச், England |
வளாகம் | Urban 366,444 சதுர மீட்டர்கள் (36.6444 ha) (excl. colleges)[3] |
Colours | Cambridge Blue[4] |
தடகள விளையாட்டுகள் | The Sporting Blue |
சேர்ப்பு | Russell Group Coimbra Group EUA G5 LERU IARU |
இணையத்தளம் | |
![]() |
31 கல்லூரிகளைக் கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 25,595 மாணவர்கள் பயில்கிறார்கள். இவற்றில் 16,160 மாணவர்கள் பட்டப் படிப்பும், 9435 மாணவர்கள் மேற்பட்டப் படிப்பும் மேற்கொள்ளுகிறார்கள். இப் பல்கலைக்கழத்திற்கு 2006 ஆம் ஆண்டின் கணக்குப் படி மொத்தம் சுமார் 4.1 பில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் நிறுவன வளர்ச்சித் தொகையாக வழங்கப்படுகிறது. இப் பல்கலைக்கழகமே ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் அதிகமான பணவசதி கொண்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் வருமானத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கை இங்கிலாந்து அரசிடம் இருந்து பெறுகின்றது.
கேம்பிரிட்ஜ் பல முக்கிய மாணவர்களைக் கொண்டுள்ளது, ஏறத்தாழ 90 நோபல் பரிசு பெற்றவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்திருந்தனர். இது பல்வேறு கல்வி சங்கங்களில் உறுப்பினராகவும் மற்றும் ஆங்கிலம் பல்கலைக்கழகங்களின் தங்க முக்கோணத்திலும் ஓர் அங்கம் வகிக்கிறது.
வரலாறு
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இங்கிலாந்து கிங் ஹென்றி IIIஆல் 1231ல் ஒரு பட்டயம் மூலம் நிறுவப்பட்டதாக அறியப்படுகிறது. 1223லிருந்து போப் கிரிகோரி IXயால் இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் எந்த ஒரு பட்டதாரியும் எங்கெல்லாம் கிறிஸ்துவம் இருக்கிறதோ அங்கெல்லாம் கற்றுக்கொடுக்கலாம் என்று கூறினார்.[6]
இந்த பல்கலைக்கழகத்தை ஒரு இடைக்கால பல்கலைக்கழகம் என்று போப் நிக்கோலஸ் IV 1290ல்[7] அறிவித்த பிறகும் போப் ஜான் XXII மூலம் 1318ல் [8] உறுதிசெய்யப்பட்ட பின்பு ஐரோப்பாவை சேர்ந்த பலர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திற்கு படிக்கவோ அல்லது விருந்தினர் உரை அளிக்கவோ வந்தனர்.
பல்கலைக்கழகத்தில் கல்லூரிகளின் அடித்தளம்


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்லூரிகள் முதலில் அமைப்பின் ஒரு ஒரு தற்காலிகமான அம்சமாக இருந்தன, ஆனால் எந்தக் கல்லூரியும் பல்கலைக்கழகத்தை விட பழமையானதாக இல்லை.எந்த விதமான ஆஸ்திகளும் இல்லாமல் தொடர்புடன் இருந்த நிறுவனங்களை விடுதிகள் என்றழைத்தனர். இந்த விடுதிகள் காலப்போக்கில் கல்லூரிகளுடன் ஐக்கியமாயின. ஆனாலும் கார்ரெட் லேன் விடுதி போன்ற பெயர்கள் இன்றும் நிலைத்துள்ளன.[9]
ஹக் டி பால்ஷாம்,எலி ஆயர் 1284ல் பீட்டர்ஹவுஸ்,கேம்பிரிச்சு என்ற கல்லூரியை முதலில் நிறுவினார். இதுவே கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் முதல் கல்லூரியாகும். பதிமூன்று மற்றும் பதினான்ங்காம் நூற்றாண்டுகளில் பல கல்லூரிகள் தொடங்கப்பெற்றன. ஆனாலும் 1596ல் தொடங்கப்பெற்ற சிட்னி சுச்செக்ஸ் கல்லூரிக்கும் 1800ல் தொடங்கப்பெற்ற டௌனிங் கல்லூரிக்கும் இடையை 204 ஆண்டு கால இடைவெளி இருந்தது.
இடைக்காலத்தில் தங்கள் கல்லூரிகளின் உறுப்பினர்கள் மற்றும் நிறுவனர்களின் ஆன்மாவிற்காக பிரார்த்தனை செய்வதற்காவே இது போன்ற கல்லூரிகல் நிறுவப்பட்டன, இவை பெரும்பாலும் தேவாலயங்களும் அல்லது ஆச்சிரமங்களிலும் தொடர்புடையதாக இருந்தது. இந்த போக்கு 1536ல் மடாலயங்களின் கலைத்தலுக்கு பின்பு மாறியது.
பரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்கள்
மேற்கோள்கள்
- "Cambridge College Buys a Bank" (PDF). Bloomberg. பார்த்த நாள் 24 July 2013.
- "Facts and Figures January 2012" (PDF). Cambridge University. பார்த்த நாள் 1 April 2012.
- "University of Cambridge—Facts and Figures January 2013".
- "Identity Guidelines – Colour" (PDF). University of Cambridge Office of External Affairs and Communications. பார்த்த நாள் 28 March 2008.
- Sager, Peter (2005). Oxford and Cambridge: An Uncommon History.
- Hilde De-Ridder Symoens (2003). Cambridge University Press. ed. A History of the University in Europe: Universities in the Middle Ages. 1. பக். 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-54113-8.
- Hackett, M.B. (1970). The original statutes of Cambridge University: The text and its history. Cambridge University Press. பக். 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-07076-8. http://books.google.com/books?id=7og8AAAAIAAJ&pg=PA178. பார்த்த நாள்: 2 September 2012.
- David Willey (journalist) (Easter 2012). "Vatican reveals Cambridge papers". Cam 66: 05.
- Charles Henry Cooper (1860). Memorials of Cambridge. 1. W. Metcalfe. பக். 32. http://books.google.co.uk/books?id=7bQWAAAAIAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 9 September 2012.
வெளி இணைப்புகள்
- கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் வலைத் தளம்
- கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம்
- கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் விரிவாக்கம்
- talks.cam.ac.uk – கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் பல்வேறு சேவைகளின் பட்டியல்
- வார்சிட்டி (Varsity) – மணவர் செய்தித்தாள்
- The Cambridge Student (TCS) – ஒரு மாணவர் செய்தித்தாள்
- BlueSci – மாணவர் அறிவியல் செய்தித்தாள்
- கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் பழைய மாணவர் இதழ்
- Gown – மேற்பட்டப் படிப்பு மாணவர் இதழ்
- CUR1350 – மானவர்கள் நடத்தும் வானொலி
- Tompkins Table – unofficial ranking of Cambridge colleges
- Cambridge University jargon
- Computing-Info – Information for prospective students about computing and networking policies at the University and within the colleges
- Images and maps
- Aerial view – from கூகுள் நிலப்படங்கள்
- Interactive map – a well designed zoomable map linking to all the University departments and colleges
- பல நிறங்களில் கேம்பிரிட்ஜ் – கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தில் ஒளிப்படக் கலை
- Cambridge 2000 – a large collection of photographs of Cambridge architecture