கொரில்லா

கொரில்லா (Gorilla gorilla), மனிதர்களுக்கு நெருங்கிய இனமான, ஆப்பிரிக்காவில் வாழும் வாலில்லாப் பெரிய மனிதக் குரங்கு இனமாகும். மனிதர்களும் கொரில்லாக்களும் சிம்ப்பன்சி போன்ற இன்னும் ஒருசில விலங்குகளும் முதனி எனப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை. முதனிகளில் யாவற்றினும் மிகப் பெரியது கொரில்லா தான். இது சுமார் 1.7 மீ (5 அடி 6 அங்குலம்) உயரம் இருக்கும். கை முட்டிகளால் ஊன்றி நடக்கும். ஆண் கொரில்லாக்கள் 150 கிலோ கிராம் (330 பவுண்டு) எடை இருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண்களில் பாதி எடை இருக்கும்.

கொரில்லா[1]
சாம்பல்முதுகு ஆண் கொரில்லா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: முதனிகள்
குடும்பம்: ஓமினிடீ
மாந்தனனை குடும்பம்
(Hominidae)
துணைக்குடும்பம்: ஓமினீ
மாந்தனனை உட்குடும்பம்
(Homininae)
சிற்றினம்: கொரில்லினி
Gorillini
பேரினம்: கொரில்லா
Gorilla

Isidore Geoffroy Saint-Hilaire, 1852
மாதிரி இனம்
Western Gorilla
Savage, 1847
இனம் (உயிரியல்)

Gorilla gorilla
Gorilla beringei

distribution of Gorilla
Sexual dimorphism of the skull

பார்ப்பதற்கு கருப்பாய் பெரிய உருவமாய் இருப்பினும், இவை இலை தழை பழம், கிழங்கு உண்ணிகள்; என்றாலும் சிறிதளவு பூச்சிகளையும் உண்ணும் (உணவில் 1-2% பூச்சிகள் என்பர்); வாழ்நாள் 30-50 ஆண்டுகள். பெண் கொரில்லாக்கள் கருவுற்று இருக்கும் காலம் 8.5 மாதங்கள். இவை 3-4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கருவுருகின்றன. பெரும்பாலும் எல்லா கொரில்லாக்களும் B இரத்த வகையைச் சார்ந்தது என்று அறிந்திருக்கிறார்கள். இதனுடைய டி.என்.ஏ 95-99% மனிதர்களுடன் ஒத்திருப்பதால்[2] இவை சிம்ப்பன்சிக்கு அடுத்தாற்போல மனிதனுடன் நெருக்கமான உயிரினம் என்பார்கள்.

மேற்கோள்கள்

  1. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 181-182. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100787.
  2. Greater Than 98% Chimp/Human DNA Similarity? Not Any More.. Answers in Genesis (2003-04-01). Retrieved on 2011-09-27.

வெளி இணைப்புகள்

  • கொரில்லா உண்ணும் காட்சி (கோப்பு விவரம்)
    • ஜனவரி 2006ல், Disney animal kingdomல் பதிவு செய்யப்பட்ட, ஒரு கொரில்லா உண்ணும் காட்சி.
    • ஒளிக்கோப்பை பார்ப்பதில் சிக்கலா? பார்க்கவும் ஊடக உதவி.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.