கிறிஸ்து வெண்பா (நூல்)

கிறிஸ்து வெண்பா என்னும் காப்பியம் கி.மு.ம. மரியந்தோனி என்பவரால் பாடப்பெற்றுள்ளது. இயேசு கிறித்துவின் போதனைகட்கு வெண்பா வடிவம் தந்து பாடப்பட்டதே கிறிஸ்து வெண்பா ஆகும்.

தமிழகம் வந்து கிறித்தவ சமயக் கருத்துகளைப் போதித்த புனிதர்களான புனித தோமா, புனித சவேரியார் ஆகியோரது வரலாறுகளும் இக்காப்பியத்தில் காணப்படுகின்றன.

இயேசுவின் அன்பு

பெலிக்கான் பறவை தன் குஞ்சுகளுக்கு உணவாக தனது நெஞ்சைக் கீறி இரத்தத்தை ஊட்டும் என்னும் புராதனச் செய்தி உண்டு. இயேசு மனிதகுல மீட்புக்காக சிலுவையில் தமது இரத்தத்தைச் சிந்தி மக்களுக்கு இறைவாழ்வு நல்கியதால் அவரை பெலிக்கான் பறவைக்கு ஒப்பிடுவது கிறித்தவ மரபு. இதை ஆசிரியர்,

பெலிக்கான் தன் குஞ்சுகளைப் போசிக்க வேண்டி
கலங்காது தன்னுடலைக் கொத்தி - வலிதில்
உயிர்விட்ட தன்மைபோல் யேசு தமையே
உயிர்கொடுத்து மீட்டார் உகந்து.

எனப் பாடுகிறார்.

ஆதாரம்

இர. ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.