கிறீன்லாந்து

கிறீன்லாந்து (தமிழக வழக்கு: கிரீன்லாந்து) டென்மார்க்கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதி. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவு. புவியியல் நோக்கில் வட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஓர் ஆர்ட்டிக் தீவானபோதும் வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் ஐரோப்பாவுடன் தொடர்புடையதாக உள்ளது. உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவாகும். இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர்2 (km²) இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும். ஆனால் இப்பெருநிலத்தில் மொத்தம் 55,984 பேரே வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையின் அடிப்படையில் மக்கள்தொகை அடர்த்தி குறைவான நிலப்பரப்பு.[9]

கிறீன்லாந்து
Kalaallit Nunaat
Grønland
கொடி சின்னம்
நாட்டுப்பண்: Nunarput utoqqarsuanngoravit
எங்கள் பண்டைய நிலமே நீ
Nuna asiilasooq
பெரும் நீட்சியுடைய நிலம்[1]
Location of கிறீன்லாந்து
தலைநகரம்நூக்
64°10′N 51°43′W
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) கிறீன்லாந்திக் [a]
பிற மொழிகள் டானிஷ்[a] ஆங்கிலம்[2]
தனியுரிமை நாடு  டென்மார்க்
அரசாங்கம் நாடாளுமன்ற மக்களாட்சி (டென்மார்க் மன்னராட்சியின் கீழ்)
   அரசி மார்கிரெத் II
   நாட்டுப் பேராளர் மிக்கேலா எங்கெல்
   பிரதமர் கிம் கீல்சன்
டென்மார்க்கின் தன்னாட்சி மாநிலம்
   குடியுரிமை 1 மே 1979 
   தன்னாட்சி 21 சூன் 2009[3][4] 
பரப்பு
   மொத்தம் 21,66,086 கிமீ2 (12வது)
8,36,109 சதுர மைல்
   நீர் (%) 83.1[b]
மக்கள் தொகை
   டிசம்பர் 2006 கணக்கெடுப்பு 55,984 (1 சனவரி 2015)[5]
மொ.உ.உ (கொஆச) 2011 கணக்கெடுப்பு
   மொத்தம் 11.59 பில்லியன் குரோன்.[6] (தர வரிசைப்படுத்தவில்லை)
   தலைவிகிதம் $37,009.047 USD [c] (தர வரிசைப்படுத்தவில்லை)
மமேசு (2010)0.786[7]
உயர் · 61வது
நாணயம் டானிய குரோன் (DKK)
நேர வலயம் (ஒ.அ.நே0 to -4)
அழைப்புக்குறி 299
இணையக் குறி .gl
a. ^ 2009 ஆம் ஆண்டு முதல் கிறீன்லாந்திக் மொழி மட்டுமே அலுவல்முறை மொழியாக உள்ளது.[3][8]
b. ^ 2000இன் படி:
410,449 km2 (158,475 sq mi) பனி இல்லாமல்;
1,755,637 km2 (677,855 sq mi) பனி மூடிய நிலையில்.
அடர்த்தி: 0.14/km2 (0.36 /sq. mi) பனி இல்லாப்பரப்பில்.
c. ^ 2001இன் படி

டென்மார்க் நாட்டின் ஆர்கஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் உலகில் மிகப் பெரிய பனித்தீவாக இருக்கும் கிரீன்லாந்து நாட்டில் பனிப்படலங்கள் மிக வேகமாக கரைந்து வருவதாக எச்சரித்துள்ளனர்.[10]


சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.