கணேச இரதம்

கணேச இரதம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாபலிபுரத்திலுள்ள கோயில். இது பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மரபுச்சின்னங்களில் இளஞ்சிவப்பு கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள பத்து இரதங்களில் ஒன்றாகும். இந்த மரபுச்சின்னங்களை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களம் என 1984இல் அறிவித்தது.[1] இந்த இரதம் ஒற்றைக் கற்றளி இந்திய கல்வெட்டுக் கட்டிடக்கலைக்கு காட்டாக விளங்குகின்றது. ஏழாம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் மற்றும் அவரது மகன் முதலாம் நரசிம்ம பல்லவன் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும். இந்த இரதக்கோயில் துவக்கத்தில் இலிங்கம் இருந்தது; இலிங்கம் நீக்கப்பட்ட பிறகு இங்கு பிள்ளையார் வைக்கப்பட்டுள்ளார்.

கணேச இரதம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம் மாவட்டம்
அமைவு:மாமல்லபுர மரபுச்சின்னங்கள்
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:இராஜசிம்ம பல்லவன்

மேற்கோள்கள்

  1. "Group of Monuments at Mahabalipuram". UNESCO. பார்த்த நாள் 2007-02-08.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.