உருசியத் தமிழியல்

உருசியத் தமிழியல் (Russian Tamil Studies) என்பது ரஷ்ய மொழி, ரஷ்யா, மற்றும் உருசியர்களுக்கும் தமிழ், மற்றும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் எனலாம்.


தமிழியல்
தமிழ்
மலையாளத் தமிழியல்
ஆங்கிலத் தமிழியல்
சிங்களத் தமிழியல்
சமசுகிருத தமிழியல்
கன்னடத் தமிழியல்
தெலுங்குத் தமிழியல்
துளு தமிழியல்
வங்காளத் தமிழியல்
மராத்திய தமிழியல்
இந்தித் தமிழியல்
பர்மியத் தமிழியல்
சீனத் தமிழியல்
அரபுத் தமிழியல்
மலாய் தமிழியல்
தாய் தமிழியல்
உருசியத் தமிழியல்
சப்பானியத் தமிழியல்
கொரியத் தமிழியல்
செர்மானியத் தமிழியல்
பிரெஞ்சுத் தமிழியல்
டச்சுத் தமிழியல்
போத்துக்கீசத் தமிழியல்
சுவீடிசு தமிழியல்
பாளித் தமிழியல்
பிராகிருதத் தமிழியல்
பிராமித் தமிழியல்
பாரசீகத் தமிழியல்
உருதுத் தமிழியல்
எபிரேயத் தமிழியல்

தொகு

பொதுவுடமை கொள்கைகளால் உந்தப்பட்ட பல தமிழர்கள் 1950-1990 காலப்பகுதிகளில் உருசிய மொழியில் தேர்ச்சி பெற்று பல உருசிய நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தனர். இக்காலப்பகுதியில் சோவியத் ஒன்றியத்திற்கு கல்வி பெறச்சென்ற பலரும் ரஷ்ய மொழியில் தேர்ச்சிபெற்றனர். இதன் காரணமாக கணிசமான தமிழர்களுக்கு ரஷ்ய மொழி, பண்பாடு, தத்துவங்களில் பரிச்சியமும் தொடர்பும் உண்டு.

சோவியக் கால மொழிபெயர்ப்புக்கள்

"1950களிலும் அதற்குப் பின்னரும் சோவியத் அரசாங்க ஸ்தாபனமும் அமெரிக்க அரசாங்க ஸ்தாபனமும் ஏற்பட்டு போட்டி போட்டுக்கொண்டு இதில் ஈடுபாடு காட்டின. ரஷிய நூல்கள் 1990 வரை ஒரே சீரான அளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது." முகம்மது செரிபு வி. எஸ். வெங்கடேசன் கா. அப்பாத்துரை, கு. பரமசிவம், எஸ். சங்கரன், முல்லை முத்தையா, புதுமைப்பித்தன், ரகுநாதன், முகமது ஷெரீபு, எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோர் உருசிய நூலகளை மொழிபெயர்ப்பில் ஈடுபட்டோரில் உட்படுவர். [1]

சோவியத் வானொலி - தமிழ்த் துறை

சோவியத் யூனியன் இருந்த போது, தமிழ் மொழிக்கென மாஸ்கோ வானொலி நிலையத்தில் ஒரு தனித்துறை இருந்தது. இதில் திரு. மணிவர்மன், திரு. சோமசுந்தரம் ஆகியோர் பணியாற்றினார்கள். தற்போது இந்த வானொலி தனித்துறை இல்லை.

உருசியாவில் தமிழ் கல்வி

  • Moscow University's Institute of Oriental Languages

உருசிய தமிழியலாளர்கள்

மேற்கோள்கள்

  1. தமிழ் மொழிபெயர்ப்பின் அரசியல் அ.மங்கை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.