அலெக்சாண்டர் துபியான்சுகி
அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்சுகி (Alexander Dubyanskiy, உருசியம்: Алекса́ндр Миха́йлович Дубя́нский, பிறப்பு: ஏப்ரல் 27, 1941) என்பவர் உருசியத் தமிழ்ப் பேராசிரியராவர். இவர் உருசியாவில் மொசுகோ அரசுப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியப் பேராசிரியரும் ஆவார்.[1] அத்துடன் தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவர்.
பேரா. அலெக்சாண்டர் துபியான்சுகி Prof. Alexander Duyansky | |
---|---|
![]() | |
பிறப்பு | ஏப்ரல் 27, 1941 மொஸ்கோ, உருசியா |
தேசியம் | உருசியர் |
பணி | பேராசிரியர் |
பணியகம் | மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | தமிழறிஞர் |
தமிழ்ப் பணி
தற்போது மொசுகோ அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வரும் இவர்,[2] உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வருபவர்களில் ஒருவராவார். குறிப்பாக மேல்நாட்டு மொழியாய்வாளர்களிடையே தமிழ் மொழியின் இலக்கியப் பயன்பாட்டிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எடுத்தியம்புவதுடன், தமிழ்நாட்டு பேச்சு தமிழில் உரையாடவும் கூடியவர்.[3]