உண்ணிக்கொக்கு

உண்ணிக்கொக்கு மேய்ச்சல் புல்வெளிகளிலும் நெல்வயல்களிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் அதிகளவில் காணப்படும் ஒரு கொக்கு ஆகும். சிறு வெண் கொக்கை ஒத்த உடலமைப்பு கொண்டது இது; தடித்த, அளவில் சற்று சிறிய, மஞ்சள் நிற அலகும் இனப்பெருக்க காலங்களில் சிறகுத்தொகுதிகளில் ஏற்படும் நிற மாற்றங்களும் இதனை சிறு வெண்கொக்கிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.[2]

உண்ணிக்கொக்கு
Breeding adult of nominate subspecies
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பெலிகனிபார்மசு
குடும்பம்: அர்டெயிடே
பேரினம்: Bubulcus
Bonaparte, 1855
இனம்: B. ibis
இருசொற் பெயரீடு
Bubulcus ibis
(லின்னேயசு, 1758)
துணையினம்

B. i. ibis (L. 1758)
B. i. coromandus (Boddaert, 1783)
B. i. seychellarum (Salomonsen, 1934)

வேறு பெயர்கள்

Ardea ibis L. 1758
Ardeola ibis
Bubulcus bubulcus
Buphus coromandus
Cancroma coromanda
Egretta ibis (L. 1758)
Lepterodatis ibis (L. 1758)

மாட்டுக்கொக்கு, மாடு மேய்ச்சான்,மஞ்சள் கொக்கு ஆகியவை இதன் வேறு பெயர்கள்.[3]

உணவு / உண்ணும் முறை

இது பெரும்பாலும் பூச்சிகளையே உண்ணும்; மாடுகளை அண்டிச்செல்லும் இவை மாடுகள் நடக்கும் போது கிளறிவிடப்படும் வெட்டுக்கிளிகள், தத்துக்கிளிகள் போன்றவை பறக்கும் போது கொத்தித் தின்னும்.

குறிப்புகள்

  • Common Birds -- Salim Ali & Laeeq Futehally.

மேற்கோள்கள்

  1. "Bubulcus ibis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). Database entry includes justification for why this species is of least concern
  2. Common Birds -- Salim Ali & Laeeq Futehally. p. 30
  3. ரத்னம், க. (1998). தமிழில் பறவை பெயர்கள். சூலூர்: உலகம் வெளியீடு. பக். 104.

காட்சியகம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.