கொக்கு

கொக்கு நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்ட ஒரு பறவையாகும். இவை பொதுவாக வெண்ணிறத்தில் காணப்படுகின்றன. இவை மீன்கள் போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. கழுத்தை நீட்டியபடி பறக்கின்றன. சில கொக்கினங்கள் பருவகாலங்களுக்கு ஏற்ப இடம்விட்டு இடம் வலசை போகின்றன.

கொக்கு
இந்திய சாரசு கொக்கு
Grus antigone antigone
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Gruiformes
குடும்பம்: Gruidae
Vigors, 1825
Genera
  • Grus
  • Anthropoides
  • Balearica
  • Bugeranus

உடலமைப்பு

கொக்கு நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்ட ஒரு பறவையாகும். இது நடக்கும் போது கழுத்தை பின்னால் சரிக்காமல் முன் நோக்கியே நீட்டும். இவை பொதுவாக வெண்ணிறத்தில் காணப்படுகின்றன. பறக்கும் பறவை இனங்களுள் கொக்கே மிகப் பெரியவை ஆகும். சாரஸ் கொக்குகள் 175 செ.மீட்டர் உயரமுடையவை. அதேபோல் செந்தலைக் கொக்குகள் அதிக எடையுடையவை. சராசரியாக 12 கிலோ வரை காணப்படுகின்றன.

உணவு

இவை தங்கள் உணவை காலநிலை, தேவை ஆகியவற்றைச் சார்ந்து மாற்றிக்கொள்ளும். பொதுவாக மீன்கள், சிறு நீர்வாழ் பூச்சிகள், கொறித்துண்ணிகள், நிலநீர்வாழ் சிறிய விலங்குகள், தானியங்கள் மற்றும் சில தாவரங்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. இவை ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.

பலவகைக் கொக்குகள்

கொண்டையுடைய கொக்கு

மொத்தம் பதினைந்து இன கொக்குகள் உள்ளன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அண்டார்டிக்கா ஆகியவற்றைத் தவிர்த்து உலகம் முழுவதும் இவை காணப்படுகின்றன.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.