வெட்டுக்கிளி

வெட்டுக்கிளி கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த ஒரு பூச்சியினம். வெட்டுக்கிளிகள் வெளித் தோற்றத்தில் தத்துக்கிளிகள் போலிருக்கும். இதனை தத்துக்கிளிகளிலிருந்து வேறுபிரிப்பதற்காக இது குறுமுனை வெட்டுக்கிளி எனப்படும். வெட்டிக்கிளிகள் பல்வேறு நிறங்களில் உள்ளன. வேளாண்மை செய்யப்படும் பயிர்ச் செடிகளுக்குக் சேதம் விளைவிப்பதால் இது உழவர்களின் எதிரி என்று அறியப்படுகிறது.

வெட்டுக்கிளி
புதைப்படிவ காலம்:Late Permian - Recent
Immature grasshopper
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: கணுக்காலி
துணைத்தொகுதி: அறுகாலி
வகுப்பு: பூச்சியினம்
வரிசை: Orthoptera
துணைவரிசை: Caelifera
Ander, 1939
Superfamilies
  • Tridactyloidea
  • Tetrigoidea
  • Eumastacoidea
  • Pneumoroidea
  • Pyrgomorphoidea
  • Acridoidea
  • Tanaoceroidea
  • Trigonopterygoidea

உடலமைப்பு

வெட்டுக்கிளியின் உடலமைப்பு

வெட்டுக்கிளிக்குக் கணுக்களாகப் பிரிவுபட்ட மூன்று இணைக் கால்கள் இருக்கின்றன. இவற்றில் பின் இணைக் கால்கள் பிற கால்களை விட நன்கு வளர்ச்சியுடையதாக இருக்கின்றன. இந்தக் கால்கள் நீண்ட, வலிய கால்கள். இவற்றின் உதவியுடன் தரையிலிருந்து எம்பிக் குதித்து நெடுந்தூரம் தாவிக் குதிக்கிறது. வெட்டுக்கிளியின் குறுகிய, விரைப்பான சிறகு மூடிகளுக்குள் விசிறி வடிவாக மடிக்கப்பட்ட அகன்ற சிறகுகள் இருக்கின்றன. முதிர்ச்சியடைந்த பூச்சிகள் நன்றாகப் பறக்கின்றன.

உணவாக

உலகின் சில நாடுகளில் வெட்டுக்கிளிகள் புரதச்சத்து நிறைந்திருப்பதால் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மெக்சிகோவில் இவை உண்ணப்படுகின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.