ஹெரான்

ஹெரான்கள் என்பவை ஒரு வகைக் கொக்குகள் ஆகும். இவை நீளமான கால்களுடையவை ஆகும். இவை நன்னீர் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை சிறிய நாரைகளைவிடப் (egret) பெரியவை. இவற்றிற்கு நீண்ட அலகுகள் உள்ளன.

Eumetazoa

ஹெரான்கள்
புதைப்படிவ காலம்:பாலியோசீன்-தற்காலம், 55–0 Ma
PreЄ
Pg
N
ஊதா மற்றும் சாம்பல் ஹெரான்கள் (Ardea purpurea மற்றும் Ardea cinerea), மங்கவோன், மகாராஷ்டிரா, இந்தியா.
உயிரியல் வகைப்பாடு
Kingdom: விலங்கு
Phylum: முதுகுநாணி
Class: பறவை
Order: பெலிகனிபார்மசு
Family: ஹெரான்
லீச், 1820
பேரினங்கள்

தற்போது வாழும் 21 பேரினங்கள்

     வாழ்விடங்கள்
வேறு பெயர்கள்

Cochlearidae

ஹெரான்கள் என்பவை நாரைகள்அரிவாள் மூக்கன்கள் மற்றும் துடுப்புவாயன்கள் குடும்பங்களில் உள்ள பறவைகளைப் போன்றே இருந்தாலும், இவை பறக்கும்போது கழுத்தை உள்ளிளுத்தவாறு பறக்கின்றன, முன்னால் கூறிய வகைகளைப்போல் கழுத்தை நீட்டியவாறு அல்ல. இவற்றின் இறகுகளில் இருந்து தூசி பறக்கிறது.

விளக்கம்

இந்த மஞ்சள் குருகின் கழுத்து முழுமையாக உள்ளிழுக்கப்பட்டு உள்ளது.

இவை நீண்ட கால்கள், கழுத்துகள் கொண்ட நடுத்தர-பெரிய அளவுள்ள பறவைகள் ஆகும். இவற்றில் ஆண் பெண் வேறுபாடு (பால் ஈருருமை ) அறிவது கடினம் ஆகும். இக்குடும்பத்தில் சிறிய குருகு தான் மிகச் சிறியது ஆகும். அது வழக்கமாக 30 செமீ (12 அங்குலம்) நீளத்தைக் கொண்டிருக்கும். ஹெரான்களில் மிகப்பெரிய இனம் கோலியத் ஹெரான் ஆகும். இது 152 செமீ (60 அங்குலம்) உயரம் உள்ளது. இவற்றின் கழுத்து S- வடிவத்தில் இருக்கும். பகலாடி ஹெரான்களின் கழுத்து இரவாடி ஹெரான்கள் மற்றும் குருகுகளைவிட நீளமாக இருக்கும். இவற்றின் கால்கள் முடியற்றுக் காணப்படுகின்றன (விதிவிலக்கு ஜிக்சாக் ஹெரான்). இவை பறக்கும்போது கால்களும் பாதமும் பின்னோக்கி நீட்டப்பட்டு இருக்கும்.[1]

உசாத்துணை

  1. Martínez-Vilalta, Albert; Motis, Anna (1992). "Family Ardeidae (herons)". in del Hoyo, Josep; Elliott, Andrew; Sargatal, Jordi. Handbook of the Birds of the World. Volume 1: Ostriches to Ducks. Barcelona: Lynx Edicions. பக். 376–403. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-84-87334-10-8.

மேலும் படிக்க

  • Hancock, James & Elliott, Hugh (1978) The Herons of the World; with paintings by Robert Gillmor and Peter Hayman, and drawings by Robert Gillmor. London: London Editions ISBN 0-905562-05-4; New York: Harper & Row ISBN 0-06-011759-1

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.