இராஜகுமாரன் (இயக்குநர்)
இராஜகுமாரன் என்பவர் இந்திய திரைப்பட இயக்குனரும், நடிகரும் ஆவார். இவர் நடிகை தேவயானியை 2001ல் திருமணம் செய்து கொண்டார். இவர் இயக்கிய பல படங்களில் தேவயானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இராஜகுமாரன் | |
---|---|
பிறப்பு | அந்தியூர்,தமிழ்நாடு |
பணி | இயக்குநர் (திரைப்படம்), நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1999– தற்போது |
வாழ்க்கைத் துணை | தேவையானி (2001–தற்போது) |
நீ வருவாய் என என்ற திரைப்படத்தில் இயக்குனர் விக்ரமன் அவர்களின் துணை இயக்குனராக ராஜமாரன் பணியாற்றினார்.[1] சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது இராஜகுமாரனுக்கு கிடைத்தது.
திருத்தணி முருகன் கோயில் ஏப்ரல் 2001ல் தேவயானி மற்றும் இராஜகுமாரனுக்கு திருமணம் நடந்தது.[2] படபிடிப்பின் போது இருவரும் காதலித்தாக கூறப்பட்டது. இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற குழந்தைகள் உள்ளனர்.[3]
திரைப்படத்துறை
இயக்குனராக
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
1999 | நீ வருவாய் என | இராதாகிருஷ்ணன் பார்த்திபன், தேவயானி, அஜித் குமார் | சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது |
2001 | விண்ணுக்கும் மண்ணுக்கும் | விக்ரம், தேவயானி, சரத்குமார் | |
2003 | காதலுடன் | முரளி, தேவயானி, அப்பாஸ் | சிறந்த குடும்ப திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது |
2004 | சிவராம் | சாய்குமார், தேவயானி, ராமி ரெட்டி | |
2013 | திருமதி தமிழ் | இராஜகுமாரன், தேவயானி | |
நடிகராக
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
1996 | பூவே உனக்காக | ||
1997 | சூரிய வம்சம் | பேருந்து பயணர் | |
2013 | திருமதி தமிழ் | தமிழ் | |
2014 | வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் | ராஜ் | |
2017 | கடுகு | பாண்டி |
ஆதாரங்கள்
- "Nee Varuvaai Ena: Movie Review". Indolink.com. பார்த்த நாள் 10 February 2014.
- "Telugu Cinema Etc". Idlebrain.com (9 April 2001). பார்த்த நாள் 10 February 2014.
- "Devayani gives birth to second child – Tamil Movie News". Indiaglitz.com (1 February 2008). பார்த்த நாள் 10 February 2014.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.