விக்ரமன்

விக்ரமன் (ஆங்கிலம்:Vikraman) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இவருடைய திரைப்படங்கள் இனிமையான பாடல்களுக்காகவும் குடும்பப் பாங்கான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காகவும் அறியப்படுகின்றன.[1] இவருடைய படங்களில் பெண்களின் மீதான சமூக அக்கறை அதிகமாகவே இருக்கும். தற்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

விக்ரமன்
Vikraman
பிறப்புமார்ச் 30 1966
பணிஇயக்குனர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1989– தற்சமயம் வரை

வாழ்க்கைக் குறிப்பு

இவர் சென்னையில் வசிக்கிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

திரைப்பட வரலாறு

புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

திரைப்படங்கள்

எண்ஆண்டுபடம்மொழிகுறிப்புகள்
11990புது வசந்தம்தமிழ்சிறந்த இயக்குனர்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
  • சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
  • சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் – தமிழ்
21991பெரும்புள்ளிதமிழ்
31993கோகுலம்தமிழ்சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. (மூன்றாம் இடம்)
4நான் பேச நினைப்பதெல்லாம்தமிழ்
51994புதிய மன்னர்கள்தமிழ்
61996பூவே உனக்காகதமிழ்
71997சூரிய வம்சம்தமிழ்சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
  • சிறந்த இயக்குனர்க்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
81998உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்தமிழ்சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. (மூன்றாவது இடம்)
  • சிறந்த திரைக்கதை எழுத்தாளர்க்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
92000வானத்தைப் போலதமிழ்சிறந்த மனமகிழ்ச்சிதரும் பிரபல திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது
  • சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
  • சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
102002உன்னை நினைத்துதமிழ்சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது

- (மூன்றாவது இடம்)

112003பிரியமான தோழிதமிழ்
12வசந்தம்தெலுங்குபிரியமான தோழி திரைப்படத்தின் மறு ஆக்கம்.
132004செப்பவே சிறுகாலிதெலுங்குஉன்னை நினைத்து திரைப்படத்தின் மறு ஆக்கம்.
142006சென்னை காதல்தமிழ்
152009மரியாதைதமிழ்
162013நினைத்தது யாரோதமிழ்

ஆதாரம்

  1. "இயக்குனர் விக்ரமன் திரை வாழ்க்கை". பார்த்த நாள் சூன் 27-2013.

வெளியிணைப்பு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில்
விக்ரமன் இயக்குநர்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.