ஆத்தியடி

ஆத்தியடி இலங்கையின் வடபுலத்தில் யாழ் மாவட்டத்தில், வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறை, மேலைப்புலோலியில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர் ஆகும். இதன் எல்லைகளாக மேற்கே தம்பசிட்டி கிராமமும், கிழக்கே வினாயகமுதலியார் வீதியும், தெற்கே வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி வீதியும், வடக்கே கோணந்தீவும் அமைந்துள்ளன.

ஆத்தியடியின் வடக்கே ஒன்றரை மைல் தொலைவில்தான் இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த பனைகளின் இடைவெளிகளின் ஊடும், ஓட்டு வீடுகளின் முகடுகளின் ஊடும், ஓலைக்குடில்களை உரசிக் கொண்டும், ஹாட்லிக் கல்லூரி வீதியில் தவழ்ந்து கொண்டும் காற்று அள்ளி வரும் ஆர்பரிக்கும் கடலின் அலையோசை எப்போதுமே ஆத்தியடி மக்களின் வாழ்வோடு இணைந்த தாலாட்டு.

வரலாறு

  • அத்திமரம் ஒன்று இருந்ததினாலேயே அந்த ஊர் அத்தியடி என்ற காரணப்பெயரைப் பெற்று காலப்போக்கில் ஆத்தியடி என மருவியதாகச் சொல்வார்கள்.
  • அத்திமரத்தில் பிள்ளையார் போன்ற உருவம் தெரிந்ததாகவும், அதிலிருந்து அவ்விடத்தில் கல் வைத்து கற்பூரம் கொழுத்தி வழிபட்டு வந்ததாகவும் காலப்போக்கில் அதுவே ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலாக வளர்ந்து விட்டதாகவும் சொல்வார்கள். ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் பருத்தித்துறையில் அமைந்திருக்கும் குறிப்பிடத்தக்க கோயில்களில் ஒன்று.
  • ஆத்தியடியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், உப அஞ்சல் அலுவலகம், காணி அலுவலகம்.. போன்றவை அமைந்திருப்பதால் அது ஒரு சிறிய நகரம் என்பது போன்றதான பிரமையை மற்றவர்க்கு ஏற்படுத்துவதுண்டு.
  • இங்கு அரசடி, புதியாக்கணக்கன், வட்டப்பாதி... போன்ற சிற்றிடங்களும் உள்ளன. காணிகளின் பெயர்களைக் கொண்டே இந்த இடங்கள் உருவாகியதாகச் சொல்வார்கள்.
  • இங்கு வாழ் மக்கள் ஓரளவு வசதி படைத்தவர்களாகவும், கல்வியில் மேலோங்கியவர்களாகவும், அரச தொழில்களைச் செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள். அதே நேரத்தில் புதியாக்கணக்கன், வட்டப்பாதி போன்ற இடங்களில் 1980 ம் ஆண்டுக் காலப்பகுதி வரை எள் ஆட்டும் தொழிலும் குடிசைக் கைத்தொழிலாக இருந்தது. நல்லெண்ணெய் வாங்குவதற்கும், ஆட்டுக்கு பிண்ணாக்கு வாங்குவதற்கும் பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு மக்கள் வந்து போவார்கள்.

ஆலயங்கள்

ஆத்தியடியில் பிறந்தவர்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.