புலோலி

9°48′00″N 80°13′00″E

புலோலி

புலோலி
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.8°N 80.216667°E / 9.8; 80.216667
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

புலோலி இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வடமராட்சி எனும் பிரிவில் அமைந்துள்ளது. இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில், பருத்தித்துறைக்குச் சமீபமாக அமைந்துள்ளது.

புலோலி பழம்பெரும் பாரம்பரியத்தையும் நீண்ட புராதன மொழி, சமய கலாசார மரபு விழுமியங்களையும் தனித்துவமாகத் தன்னகத்தே கொண்ட புகழ்பூத்த நகரம் ஆகும். புலவர்களின் குரல் ஒலித்தமையால் புலோலி என்னும் காரணப்பெயர் இதற்கு சூட்டப்பெற்றது. பச்சிமப் புலவர்கான நகரம் என இதற்கு மறுபெயருமுண்டு.

பருத்தித்துறை நகரசபையின் தெற்கு எல்லை இதன் வடக்கு எல்லையாகவும், பருத்தித்துறை மருதங்கேணி வீதி இதன் கிழக்கு எல்லையாகவும், துன்னாலை, அல்வாய் என்னும் கிராமங்கள் முறையே இதன் தெற்கு மேற்கு எல்லைகளாகவும் அமைந்துள்ளன. அரச நிர்வாக நோக்கில், புலோலி திக்குவாரியாக 14 கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் பண்டிதர்கள், வித்துவ சிரோமணிகள், நாவலர்கள் , புலவர்கள் அறிஞர்கள் போன்றோர் புலோலியில் பிறந்து பணியாற்றித் தத்தம் முத்திரையைப் பதித்து மறைந்தமைக்கான சான்றுகள் உள்ளதாக அறியப்படுகிறது.

புலோலியைச் சேர்ந்தவர்கள்

ஆலயங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.