ஆட்டோகிராப் (திரைப்படம்)
ஆட்டோகிராஃப் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சேரன் இதனை எழுதி, இயக்கி, தயாரித்ததுடன் நடிக்கவும் நடித்தார். இப்படம் வணிக நோக்கில் பெருவெற்றி பெற்றதுடன் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றது.
ஆட்டோகிராப் | |
---|---|
![]() | |
இயக்கம் | சேரன் |
தயாரிப்பு | சேரன் |
கதை | சேரன் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | சேரன் சினேகா கோபிகா மல்லிகா கனிகா |
விநியோகம் | டிரீம் தியேட்டர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 2004 |
ஓட்டம் | 168 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சேரன் - செந்தில்குமார்
- சிவப்பிரகாசம் - செந்தில்குமார், (சிறுவயது)
- சினேகா - திவ்யா (செந்திலின் நண்பி)
- கோபிகா - லத்திகா (செந்தில் காதல் செய்யும் பெண்)
- மல்லிகா - கமலா(செந்திலின் சிறு வயது காதலி)
- கனிகா - தேன்மொழி(செந்தில் திருமணம் செய்யும் பெண்)
- இளவரசு - நாராயணன் (ஆசிரியர்)
- கருப்பையா பாரதி - நாராயணன் ஆசிரியர் (வயதானவர்)
- கிருஷ்ணா - கமலக்கண்ணன்
- பெஞ்சமின் - ஊளமூக்கன் சுப்பிரமணி
- பாண்டி - ஊளமூக்கன் சுப்பிரமணி (சிறுவயது)
- ராஜேஷ் - செந்தில்குமாரின் அப்பா
- விஜயா சிங் - செந்தில்குமாரின் அம்மா
வென்ற விருதுகள்
இத்திரைப்படம் வெளியான நாள்முதல் இப்படம் வென்ற விருதுகளை கீழே காணலாம்.
இந்திய தேசிய திரைப்பட விருதுகள்
- தங்கத் தாமரை விருது - சிறந்த மனமகிழ்ச்சி தரும் பிரபல திரைப்படம் - சேரன்
- வெள்ளித் தாமரை விருது - சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது - சித்ரா
- வெள்ளித் தாமரை விருது - சிறந்த பாடலாசிரியருக்கான விருது - பா. விஜய்
பாடல்கள்
ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் பரத்வாஜ் ஆவார்.
எண் | பாடல் | பாடியவர்(கள்) |
---|---|---|
1 | "ஞாபகம் வருதே" | பரத்வாஜ் |
2 | "கிழக்கே பார்த்தேன்" | யுகேந்திரன், போனி |
3 | "மனமே நலமா" | பரத்வாஜ் |
4 | "மனசுக்குள்ளே தாகம்" | ஹரிஷ் ராகவேந்திரா, ரேஷ்மி |
5 | "மீசை வச்ச பேராண்டி" | கோவை கமலா, கார்த்திக் |
6 | "நினைவுகள் நெஞ்சினில்" | உன்னிமேனன் |
7 | "ஒவ்வொரு பூக்களுமே" | சித்ரா |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.