யுகேந்திரன்

யுகேந்திரன் ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகரும் ஆவார். இவர் இது வரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.[1].[2] மேலும் இவர் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.

யுகேந்திரன்
பிறப்புயுகேந்திரன் வாசுதேவன் நாயர்
20 திசம்பர் 1976 (1976-12-20)
சென்னை, தமிழ் நாடு, இந்தியா
பணிநடிகர், பாடகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1987-இன்று வரை
வாழ்க்கைத்
துணை
Hayma Malini

வாழ்க்கை

இவர் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன். இவரது சகோதரி பிரசாந்தினி தமிழ் பின்னணிப் பாடகராக உள்ளார். இவர் 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை வானொலியான சுவர்ண ஒலியில் பங்கேற்றபோது தன் வாழ்க்கைத்துணையான ஹேம மாலினியைக் கண்டார். இவரது மனைவி சிங்கப்பூரைச் சேர்ந்தவர், வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

இசைப்பயணம்

சிறு வயதிலேயே இசை கற்ற இவர் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரது உழவன் மகன் என்ற திரைப்படத்தில், தனது முதல் பாடலான ”செந்தூரப் பூவே”யில், ஆடுமேய்க்கும் சிறுவனின் குரலில் பாடினார். பொள்ளாச்சி சந்தையிலே என்னும் திரைப்படத்தில் பின்னணிப் பாடகராகினார். பிரபல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்குப் பாடியுள்ளார்.

திரைப்பயணம்

இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். மேலும் ”மேகலா” மற்றும் “இதயம்” ஆகிய தமிழ் நாடகங்களிலும் நடித்துள்ளார்.

நடிகராக

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2001பூவெல்லாம் உன் வாசம்கர்ணாதமிழ்
2002யூத்பிரதாப்தமிழ்
பகவதிஆனந்த்தமிழ்
2003ஸ்டூடண்ட் நம்பர் 1சத்யாதமிழ்
கையோடு கைதமிழ்
அன்பே அன்பேசிவாதமிழ்
2004ஒரு முறை சொல்லிவிடுதமிழ்
மதுரஜீவன்தமிழ்
2005திருப்பாச்சிஇன்ஸ்பெக்டர் வேலுச்சாமிதமிழ்
உள்ளக்காதல்தமிழ்
அலையடிக்குதுதமிழ்
2007முதல் கனவேடேவிட்தமிழ்
2008னெஞ்சத்தைக் கிள்ளாதேமெய்யப்பன்தமிழ்
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டுராஜுதமிழ்
பச்சை நிறமேதமிழ்
2009ராஜாதி ராஜாதமிழ்
நியூட்டனின் மூன்றாம் விதிதேவாதமிழ்
2011யுத்தம் செய்இன்பாதமிழ்
2012காதலானேன்தமிழ்
காதல் சாம்ராஜ்ஜியம்தமிழ்நிலுவையில்

பாடகராக

பாடலின் பெயர்இசைக்கோவைஇணைப் பாடகர்கள்இசை
ஏ சம்பா ஏ சம்பாபாண்டவர் பூமிசுபா, மஹாராஜன்பரத்வாஜ்
ஆடி ஆடி வாம்மாஇந்திரன்சிறீவர்தினிமணி சர்மா
அடிடாகோவாசரண்யுவன் சங்கர் ராஜா
ஆட்டோகிராப்ஐ லவ் யூ டாஷாலினிபரத்வாஜ்
கரோலினாகாதல் சடுகுடுகார்த்திக்தேவா
செர்ரி செர்ரிலவ் சேனல்அனுராதா சிறீராம்தேவா
என்ன பார்க்கிறாய்தவமாய் தவமிருந்துசுசித்ராசபேஷ் முரளி
கல்யாணம்தான் கட்டிகிட்டுசாமிகே கே, சிறீலேகா பார்த்தசாரதிஹாரிஸ் ஜெயராஜ்
கிழக்கே பார்த்தேன்ஆட்டோகிராப்பரத்வாஜ்
கோடைமலை மேல வச்சுகண்ணன் வருவான்சரண், சித்ராசிற்பி
கோழி வந்ததாஆஹாஅனுராதா சிறீராம், மலேசியா வாசுதேவன், சுஜாதா மோஹன்தேவன்
மெக்கி மெக்கிகாதல் திருடாஅனுராதா சிறீராம்பரணி
முல்லைப் பூகாதல் சாம்ராஜ்ஜியம்சரண், வெங்கட் பிரபுயுவன் சங்கர் ராஜா
முதல் முதலாய்லேசா லேசாமதுமிதா, திப்புஹாரிஸ் ஜெயராஜ்
நெஞ்சத்தைக் கிள்ளாதேநெஞ்சத்தைக் கிள்ளாதேபிரஷாந்தினிபிரேம்ஜி அமரன்
ஒ ஷல்லல்லா ஜமாய்ஜூனியர் சீனியர்பிரேம், யுவன் சங்கர் ராஜாயுவன் சங்கர் ராஜா
ஓ.. மரியாகாதலர் தினம்தேவன், பெபி மணிஏ. ஆர். ரகுமான்
ஒரு மாதிரிகீ மோபிரசாந்தினிஇளங்கோ கலைவாணன்
பார்த்தேன் பார்த்தேன்பார்த்தேன் ரசித்தேன்ரேஷ்மிபரத்வாஜ்
பார்த்தே பார்த்தேரிலாக்ஸ்குழுவினர்தேவா
பிகாசோ ஓவியம்ராயல் பேமிலிபிரசாத்பரணி
பொட்டல்ல காதிலேகாதல் ஜாதியுவன் சங்கர் ராஜாஇளையராஜா
ரோசாப்பூ உதட்டுலதமிழ்அனுராதா சிறீராம்பரத்வாஜ்
சுடும்வரை நெருப்புஜனனம்பாலாஜி, கார்த்திக், டிம்மி, திப்புபரத்வாஜ்
சுத்துதே சுத்துதேநேபாளிவிஜய்சிறீகாந்து தேவா
பொள்லாச்சி சந்தையிலேரோஜாவனம்பரத்வாஜ்
விளக்குவொன்னு திரிய பார்க்குதுதேவதையைக் கண்டேன்மாலதிதேவா

இசை இயக்குனராக

ஆண்டுபடம்மொழிகுறிப்பு
2007வீரமும் ஈரமும்தமிழ்
2008நெஞ்சத்தைக் கிள்ளாதேதமிழ்ஒரு பாடல் மட்டும்
2009பலம்தமிழ்
2011நெல்லை சந்திப்புதமிழ்
2012காதலானேன்தமிழ்

மேற்கோள்கள்

  1. "Find Tamil Actor Yugendran Filmography, Movies, Pictures and Videos". Jointscene.com. பார்த்த நாள் 2011-12-03.
  2. "யுகேந்திரன் - பிரபலமான இசையமைப்பாளர் - Tamil Movie News". IndiaGlitz. பார்த்த நாள் 2011-12-03.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.