அல்லா ரக்கா

குரேஷி அல்லா ரக்கா கான் (தோக்ரி: क़ुरैशी अल्ला रखा ख़ान) (29 ஏப்ரல் 1919 - 03 பிப்ரவரி 2000) இந்தியாவைச் சார்ந்த புகழ் பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஆவார். இவர் அடிக்கடி சிதார் இசைக் கலைஞர் ரவி சங்கருடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளைச் செய்துள்ளார்.

அல்லா ரக்கா
இயற்பெயர்குரேஷி அல்லா ரக்கா கான்
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)தபேலா
இசைத்துறையில்1939–2000

இளமையும், கல்வியும்

  • அல்லா ரக்கா ஜம்மு மாநிலத்தின் பாஹ்வால் எனும் இடத்தில் பிறந்தார்.
  • இவரது தாய் மொழி தோக்ரி ஆகும். 'குருதாஸ்பூர் நகரில் அவரது மாமா வீட்டில் தங்கியிருந்தபோது 12 ஆம் வயதில் தபேலா தாளங்களால் ஈர்க்கப்பட்டார்.
  • பாட்டியாலா கர்ணாவில் ஆஷிக் அலி கான் என்பவரிடம் ராகங்களைப் பற்றிப் படித்தார். பின்னர் தினமும் பல மணி நேரங்கள் பயிற்சியில் ஈடுபட்டார்.
  • இவர் முதல் நிகழ்ச்சியை லாகூர் நகரில் நடத்தினார்.
  • பின்னர் மும்பை அகில இந்திய வானொலியில் 1940 -ல் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.
  • 1943 ஆம் ஆண்டில் இரண்டு இந்தித் திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.

விருதுகள்

  1. 1977-ல் பத்மசிறீ விருது பெற்றார்.[1]
  2. 1987-ல் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றார்.[2]

இவற்றையும் காண்க

  1. அல்லா ரக்கா இசைப் பட்டியல்

மேற்சான்றுகள்

  1. "பத்மசிறீ விருது 1977". பார்த்த நாள் 29 ஏப்ரல் 2014.
  2. "சங்கீத நாடக அகாதமி விருது". பார்த்த நாள் 29 ஏப்ரல் 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.