அலட்சியம்
அலட்சியம் (carelessness or negligence) என்பது தொடரும் பல நிகழ்வுகளினை அறிந்திருப்பினும் அவற்றைப்பற்றி சற்றும் கவலைப்படாத உணர்வு. இது பல முறை ஆபத்தான பல அசம்பாவிதங்களையும் விபத்துக்களையும் உண்டாக்கி விடும். ஒரு சாமான்யமான நபர் செய்வதனை செய்யத்தவறுவது அலட்சியப்போக்கு என்பர்[1]
ஜே. எம். ஃபெயின்மேன் (Jay M. Feinman) என்பவர் ரட்ஜர்ஸ் சட்ட பல்கலைக்கழதத்தில், மக்கள் தான் செய்யும் செயல்களினால் மற்றவர்கட்கு தீங்கு விளையும் என்றறிந்து அதற்கு ஏற்றார் போல் எவ்வித தீங்குமின்றி தன் பணிகளை செவ்வணே செயாதது அலட்சியம் என்கிறார்[2].
நன்மைகள்
தேவையான விசயங்களில் அலட்சியம் காட்டுதல் அவசியம். சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
- நடந்தால் விழுந்து அடிபடும் என்ற பொதுவான நோக்கினை அலட்சியப்படுத்தும் குழந்தையே எளிதில் நடை பயில்கிறது.
- பின்வரும் அபாயத்தை கணக்கிட்டு (calculated risk) பின் ஆபத்தை அலட்சியப்படுத்தினால் பல சாதனைகளை நிகழ்த்துகின்றனர்
- திக்குவாய் அல்லது மாற்றுத்திறன் உள்ளோர் தங்களின் குறையை அலட்சியப்படுத்தி நிறைகளில் கவனம் செலுத்தி சாதிக்கலாம்
- வாழ்வில் முன்னேற பல நேரங்களில் பல்வேறுபட்ட மற்றவர் எண்ணங்களிலிருந்து தெரிக்கும் விமர்சனங்களை அலட்சியப்படுத்தல் வேண்டும்
தீமைகள்
அலட்சியம் பொதுவாக கவனக்குறைவினை தூண்டுமாதலால் பல தீமைகளையும் பயக்கும். சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
- அலட்சியத்தோடு பணி புரிவோர் வேலை பார்க்குமிடங்களில் விபத்துக்கு ஆளாகின்றனர், அல்லது மற்றவர்களை ஆளாக்குகின்றனர்
- தெருவில் அலட்சியத்தோடு வாகனம் ஓட்டுபவரால் பல சாலை விபத்துகள் நடப்பதைக் காணலாம்
- அலட்சியத்துடனும் முன்னறிவின்றியும் பொருட்களையோ விலங்குகளையோ கையாளுவோர் மரணத்தையும் சந்திக்க நேருகிறது
உசாத்துணை
- "Negligence". Encyclopædia Britannica. Meriam Webster. பார்த்த நாள் 6/12/2011.
- Feinman, Jay (2010). Law 101. New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-539513-6.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.