சாலை விபத்து
தரைவழிப் போக்குவரத்தில் தரைப் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட சாலைகளில் நடக்கக் கூடிய விபத்து சாலை விபத்து எனப்படுகிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியோ அல்லது சாலையின் ஓரங்களிலுள்ள மரம் அல்லது கட்டிடங்களில் மோதியோ பெரும்பான்மையான சாலை விபத்துக்கள் நடக்கின்றன. விபத்தின் காரணங்களாக வாகனத்தின் வடிவமைப்பு, வாகனம் செலுத்தப்பட்ட வேகம், சாலையின் தரம், சாலையின் வடிவமைப்பு, சுற்றுப்புறச் சூழ்நிலை, வாகன ஓட்டியின் ஓட்டுதல் திறன் மற்றும் வாகன ஓட்டியின் நடவடிக்கை ஆகியவற்றைக் கூறலாம். விபத்தைத் தடுக்கும் முகமாக வேகக் கட்டுப்பாடு மற்றும் போதை உட்கொண்டு வாகனம் ஓட்டுதல் போன்ற பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது.

இந்தியாவில் சாலை விபத்துகள்
இந்தியாவில் , 2013ம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,37,572 .மொத்த விபத்துகளுடன் ஒப்பிடுகையில் 2003ஆம் ஆண்டில் 21.2 என்றிருந்த விகிதம் 2013ம் ஆண்டில் 28.3 ஆக அதிகரித்தது .[1]
மேற்கோள்கள்
- "மனம் பதற வைக்கும்மரணச்சாலை விபத்துகள்". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (8 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 8 செப்டம்பர் 2014.