ஆச்சரியம்

ஆச்சரியம் (surprise and shock for positive and negative events, respectively) என்பது தான் எதிர்பாராத நிகழ்வின் போது உண்டாகும் உணர்ச்சியாகும். இது சிறிய அளவிலோ, நன்மையையோ அல்லது தீமையையோ கருதி உருவாகும் உணர்வாகும்.

ஆச்சரிய நிலையில் பெண்மணி.

தோன்றும் காலம்

சில முன்னர் நிர்ணயிக்கப்பட்ட சட்டதிட்டங்களின் படி நிகழ்வுகள் நடக்காவிடில் அது ஆச்சரியத்தினை உண்டாக்கும். இவ்வாறு தான் நடக்கும் என மனம் தீர்மானிக்க, எதிர்பார்த்தபடி நடைபெறாவிடில் உண்டாகும்.[1]

உடலியல் மாற்றங்கள்

  1. கண்களின் புருவங்கள் மேலுயர்ந்து வளைவாகும்
  2. சமநிலையான கோடுகள் நெற்றியில் தோன்றும்
  3. கண்கள் விரிந்து வெள்ளை நிற பகுதி அதிகமாக தெரிய வரும்
  4. வாய் திறந்து கீழ் தாடை கீழே விழுதல்

தாடைகள் எவ்வளவு கீழே விழுகின்றன என்பதனையும், விழிகள் விரியும் அளவினையும் பொருத்து எவ்வளவு ஆச்சரியம் உண்டாயிருக்கிறதென அறியலாம். சில நேரங்களில் வாய் திறக்காவிடினும், எளிதாக ஆச்சரிய உணர்வை உணரலாம்[2].


  1. அற்புதம்
  2. வியப்பு
  3. அதிர்ச்சி (தீமை எனில்)

கலைகளில் பங்கு

ஆச்சரியம் என்பதனை அத்புதம் (अद्भुतं) என்று குறிப்பிட்டு ஒன்பது நவரசங்களில் ஒன்றாக பரதம் பழகுவோர் பழகுவர். பல்வேறான உணர்ச்சிகளில் ஒன்றாக வெளிப்படுத்த கற்பர்.

உசாத்துணை

  1. John L.Cast; "Complexification: Explaining a paradoxical world through the Science of Surprise", Abacus, 1994.
  2. Ekman, P. & Friesen, W. V. (1975). Unmasking the face. Englewood Cliffs, NJ: Prentice Hall, Inc.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.