அருணா சாயிராம்
அருணா சாயிராம் தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க கருநாடக இசைப் பாடகர்களுள் ஒருவர்.
இசைப் பயிற்சி
அருணா சாயிராம் மும்பையில் வளர்ந்தவர். இவரது குடும்பம் இசைப் பின்னணி கொண்டது. இவரது தாயார் ராஜலட்சுமி சேதுராமன் ஆலத்தூர் சகோதரர்கள் மற்றும் தஞ்சாவூர் சங்கர அய்யரின் சிஷ்யை. அருணாவின் வீட்டிற்கு வந்து டி. பிருந்தா இசையினைக் கற்பித்தார். மும்பையில் தனது இல்லம் பல இசைக்கலைஞர்கள் வந்து செல்லும் இடமாக இருந்ததால் தான் இசை ஆர்வம் பெற்றிருக்கக் கூடும் என்று தொலைக்காட்சி நேர்காணலில் அருணா தெரிவித்துள்ளார்.[1]
கலை வாழ்க்கை
இந்தியாவில் உள்ள எல்லா பெரிய சபைகளிலும் அருணா சாயிராம் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி உலகின் பல இடங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
விருதுகள்[2]
- பத்மஸ்ரீ விருது
- சங்கீத சூடாமணி விருது, 2006 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை
- இசைப்பேரறிஞர் விருது, 2009. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3]
- இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது, 2012
- சங்கீத நாடக அகாதமி விருது, 2013[4]
மேற்கோள்கள்
- அருணா சாயிராம் உடனான நேர்காணல்
- http://dinamani.com/music/article1312021.ece
- "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.
- SNA Awardeeslist
வெளியிணைப்புகள்
- The aesthete in Aruna Sairam - ஒரு சிறப்புக் கட்டுரை
- ‘Where words fail, music speaks’ - நேயர்களின் கேள்விகளுக்கு அருணாவின் பதில்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.