அடா யோனத்

அடா யோனத் (Ada Yonath, எபிரேயம்: עדה יונת; பிறப்பு: 22 சூன், 1939)[1] இசுரேலிய படிகவியலாளர். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான "ரைபோசோம்" (ribosome) எனப்படும் செல்களின் கட்டமைப்பை ஆய்வு செய்ய குளிர்நிலை உயிரிபடிகவியல் முறைகளைக் குறித்த முன்னோடியான தமது ஆய்வுப்பணிக்காக அறியப்பட்டவர். வீஸ்மேன் அறிவியல் கழகத்தின் ஹெலன் மற்றும் மில்டன் ஏ.கிம்மேல்மேன் உயிரியல் மூலக்கூற்று கட்டமைப்பு மற்றும் உருவாக்கல் மையத்தின் நடப்பு இயக்குனராக உள்ளார். "ரைபோசோம் எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக" இவருக்கும் தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் 2009ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதுவரை நோபல் பரிசு பெற்றிருக்கும் ஒன்பது இசுரேலியர்களில் இவரே முதல் பெண்மணி என்பதும் [2] இதற்கு முந்தைய 45 ஆண்டுகளில் வேதியியலில் நோபல்பரிசு பெற்ற முதல் பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடா ஈ. யோனத்
பிறப்பு22 சூன் 1939 (1939-06-22)
ஜெரூசலெம்
வாழிடம்இசுரேல்
தேசியம்இசுரேலியர்
துறைபடிகவுருவியல்
பணியிடங்கள்வீஸ்மேன் அறிவியல் கழகம்
கல்வி கற்ற இடங்கள்எபிரேய பல்கலைக்கழகம், ஜெரூசலெம், வீஸ்மேன் அறிவியல் கழகம்
அறியப்படுவதுகுளிர்நிலை உயிரிபடிகவியல்
விருதுகள்வேதியியல் உல்ஃப் பரிசு (2006)
பெண் அறிவியலாளர்களுக்கான லோரியல் - யுனெஸ்கோ பரிசு (2008)
வேதியியலுக்கான நோபல் பரிசு (2009).

மேற்கோள்கள்

  1. "Israel Prize Official Site (in Hebrew) – Recipient's C.V.".
  2. Nobel Prize Winner 'Happy, Shocked', யெருசலேம் போஸ்ட்]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.