எடுவர்டு பூக்னர்

எடுவர்டு பூக்னர் (Eduard Buchner, மே 20, 1860ஆகஸ்ட் 13, 1917) ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் அறிஞரும்[1] நொதியியல் (zymologist) அறிஞரும் ஆவார். இவர் நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையைக் கண்டதற்காக, 1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்[2].

எடுவர்டு பூக்னர்
பிறப்பு20 மே 1860
மியூனிக்
இறப்பு13 ஆகத்து 1917 (அகவை 57)
போக்சனி
படித்த இடங்கள்
பணிபல்கலைக்கழகப் பேராசிரியர்
வேலை வழங்குபவர்
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு

எடுவர்டு பூக்னர் ஜெர்மனியில் மியூனிக் நகரில் பிறந்தார். இவருடைய தந்தையார் மருத்துவராகவும் குற்றவியலில் துப்பு கண்டுபிடிக்கும் மருத்துவராகவும் இருந்தார். எடுவர்டு பூக்னர் அவர்கள் 1884ல் மியூனிக் நகரில் அடால்ஃப் வான் பேயரிடம் (Adolf von Baeyer ) வேதியியலும் பேராசிரியர் சி. வான் நேகெலி (C. von Naegeli) அவர்களிடம் தாவரவியலும் பயிலத் தொடங்கினார். இவர் 1888ல் பெர்லின் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள்

  1. ""Eduard Buchner - Biographical".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. ""Eduard Buchner - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.