அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர்
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.
தகவல் | விவரம் |
---|---|
பெயர் | பார்வதி |
ஊர் | மேல் மலையனூர் |
மந்திரம் | ஓம் சக்தி |
துணை | சிவன் |
ஆயுதங்கள் | வாள், கபாலம் |
குன்று | கழுகு |
மூலவர்
இக்கோயிலின் மூலவராக அங்காளபரமேசுவரி உள்ளார். [1]
வடிவம்
அங்காளம்மன் சிவனின் மனைவி பார்வதியாவார். மேல்மலையனூர் அங்காள பரமேசுவரி கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்து புராணப்படி, முன்பு பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தனவாம். பார்வதி சிவன் என்று நினைத்து பிரம்மன் காலில் விழுந்தார். பின்பு பிரம்மனின் உண்மையான முகம் அறிந்த பார்வதி சிவனை அழைக்கவே சிவன் பிரம்மனின் ஒரு தலையை துண்டித்தார். இதனால் கோபமுற்ற பிரம்மனது தலை சிவனின் கையில் ஒட்டிக் கொண்டது. சிவன் பசியால் சாப்பிடும்போது அவ்வுணவில் பாதியை பிரம்மனின் தலை சாப்பிட்டது இதனை விஷ்ணுவிடம் முறையிட்டார் பார்வதி. விஷ்ணு சாபவிமோசனம் அடைய வழி சொன்னார். இதனை பின்பற்றிய பார்வதி சிவனை அழைத்துக் கொண்டு மேல்மலையனூருக்கு வந்தார். அங்கு உணவை தானே செய்து கீழே போட்டார் பிரம்மனின் தலை உண்டது சிவனின் கையை புனித ஆற்றில் கழுவினார் இச்செயலால் பிரம்மன் தலை சிவனின் கையில் ஒட்டவில்லை பதிலாக பார்வதியின் காலில் ஒட்டிக் கொண்டது. பார்வதி ஆங்காரமாக நடனமாடினார் தலையுடன் காலும் சிதறுண்டது .பார்வதியம்மாள் தனது உருவத்தில் பாதியை இக்கோயிலுக்கு நோய் தீர்க்க வேண்டிவரும் பக்தர்களுக்காக இவ்விடத்திலேயே அமைந்துவிட்டார். [2]
விழாக்கள்
ஆடி வெள்ளிக்கிழமை, நவராத்திரி, கார்த்திகை, தைப் பொங்கல், மாசி மாதத் தேர்த்திருவிழா உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலின் நடைபெறுகின்றன. [1]