அங்காளபரமேசுவரி
அங்காளம்மன் அல்லது அங்காளபரமேசுவரி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களில் ஒருவராவார். இவர் பல சாதி குழுக்களின் குல தெய்வமாக வழிபடப்படுகிறார்.[1]
சொல்லிலக்கணம்
அங்காளம் என்றால் இணைதல் என்று பொருள். அங்கங்களை இணைத்து சிவபெருமான் உருவாக்கியமையால் இவரை அங்காளம்மன் என்கின்றனர்.
தொன்மம்
வல்லாள கண்டன் எனும் அரக்கன் சிவபெருமானிடம் இரு வரங்களை பெற்றார். அந்த வரங்களைக் கொண்டு தேவர்களை துன்புறுத்தினார். அரக்கனைக் கொல்ல பார்வதி ஆறு அவதாரங்களை எடுத்தார். அதில் எரிந்து சாம்பலானார். அச்சாம்பலைத் திரட்டி சிவபெருமான் அங்காளம்மனை உருவாக்கினார்.
கோயில்கள்
- மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில்
- அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம், அண்ணா நகர், விளார் சாலை, தஞ்சாவூர்
- அங்காள பரமேஸ்வரி கோவில், வைசியாள்வீதி, கோயமுத்தூர்
அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயங்கள்
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர், விழுப்புரம் மாவட்டம்.
- அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம், அண்ணா நகர், விளார் சாலை, தஞ்சாவூர்.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், புட்லூர், திருவள்ளூர் மாவட்டம்.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், சூளை, சென்னை.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், ராயபுரம் கல்மண்டபம், சென்னை.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், சென்ட்ரல், சென்னை.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், முத்தனாம் பாளையம், திருப்பூர் மாவட்டம்.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம்.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், சூரக்குழி, ஆண்டிமடம் அருகே, அரியலூர் மாவட்டம்.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கோடாலிகருப்பூர், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், வானாதிராஜபுரம், கடலூர் மாவட்டம்.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், துறையூர், திருச்சி மாவட்டம்.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், திருப்பனிபேட்டை, திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம்.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கோட்டூர், திருவாரூர் மாவட்டம்.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கூவத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், வேளுக்குடி, திருவாரூர், தஞ்சை மாவட்டம்.
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், அச்சுதம்பேட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டம்.
வெளிநாடுகளில் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயங்கள்
- அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கோலா செலங்கோர், மலேசியா.
மேற்கோள்கள்
- அங்காளபரமேஸ்வரி வரலாறு.
- சூளை அங்காளபரமேஸ்வரி அற்புதங்கள்.
- புட்லூர் அங்காளபரமேஸ்வரி அற்புதங்கள்.
- மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயம்.
- http://temple.dinamalar.com/New.php?id=706 அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.