குன்று

குன்று என்பது அதனைச் சுற்றியுள்ள இடங்களைக் காட்டிலும் உயர்ந்து காணப்படுகின்ற ஒரு நில அமைப்பாகும். குன்றுகள் பெரும்பாலும் ஒரு உச்சியை உடையனவாக உள்ளன. எனினும், உச்சி எதுவும் இல்லாமலேயே உயர்வான தட்டையான நிலப்பகுதியையும் குன்று என அழைப்பது உண்டு.

விக்டோரியாவில் உள்ள கான்னர்ஸ் குன்று

குன்று, மலை என்பவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் தெளிவாக இல்லை. எனினும், குன்று மலையைவிட உயரம் குறைந்ததாகவும், சரிவு குறைந்ததாகவும் இருக்கும். ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] புவியியலாளர்கள், கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டருக்கு (1,000 அடி) மேற்பட்ட உயரம் கொண்ட குன்றுகளையே மலை எனக் கருதி வந்துள்ளனர். ஆனால், குன்றில்நடப்போர், கடல் மட்டத்திலிருந்து 610 மீட்டர்களுக்கு (2,000 அடி) மேற்பட்டவற்றையே மலை எனக் கொள்கின்றனர். ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியும் 610 மீட்டர்கள் உயரத்துக்கு மேற்பட்டவையே மலை எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே ஒக்லஹோமா, பொட்டேயுவில் உள்ள கவானல் குன்று உலகின் உயரமான குன்று எனக் கூறப்படுகின்றது. இதன் உயரம் 1,999 அடி ஆகும்.

ஆக்ரமிப்புகள் மற்றும் சர்ச்சைகள்

தமிழகத்தின் திருக்கழுக்குன்றம், அச்சிறுப்பாக்கம், நத்தம் பழவேலி, புலிப்பாக்கம், கொல்லிமலை போன்ற தொன்மையான இடங்களில் அமைந்துள்ள குன்றுகள் மதமாற்ற கிறித்துவ போதகர்களால் சிலுவை சின்னமிடப்பட்டும் புதிதாக சர்ச்சுகள் நிர்மாணிக்கப்பட்டும் ஆக்ரமிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது.இவற்றில் அரிய வகை மூலிகைகளும், வரலாற்றுச் சின்னங்களும் உள்ள குன்றுகளும் அடங்கும்.[1][2][3]

மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாலும் ஒரு சில அதிகாரிகள் ஆக்ரமிப்புக்குத் துணை போவதாலும் இச்செயல் தொடர்ந்து நடந்து வரலாற்று சின்னங்களாக உள்ள குன்றுகள் பல காணாமல் போகும் நிலை தொடரக்கூடும் என்று சுற்றுச்சூழல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர்.[3]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. குமுதம் ஜோதிடம்; 26.07.2013
  2. தினமலர்;3.7.2013 (ஜூலை 3)
  3. http://www.dinamalar.com/district_detail.asp?id=747077&dtnew=7/2/2013


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.