2016 கோடைக்கால ஒலிம்பிக், மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் நிகழிடங்கள்

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக "XXXI ஒலிம்பியாடு விளையாட்டுக்கள்" பிரேசில் இரியோ டி செனீரோ நகரில் 2016ஆம் ஆண்டு ஆகத்து 5 முதல் ஆகத்து 21 வரை நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.[n 1][1]

இந்தப் போட்டிகள் ஏற்கெனவே உள்ள 18 நிகழிடங்களிலும் (இவற்றில் எட்டு மேம்படுத்தப்பட்டவை), புதியதாக கோடை ஒலிம்பிக்கிற்கு எனக் கட்டப்பட்ட ஒன்பது அரங்கங்களிலும் தற்காலிகமாக எழுப்பப்பட்டு விளையாட்டுப் போட்டிகளுக்கு பின்னர் அழிக்கப்படவுள்ள ஏழு நிகழிடங்களிலும் நடைபெற்றன.[2] ஒவ்வொரு போட்டியும் புவியியல்படி பிரிக்கப்பட்டுள்ள நான்கு ஒலிம்பிக் கொத்துக்களில் ஒன்றில் நடைபெறும்: பாரா, கோப்பக்கபானா, டியோடோரோ, மரக்கானா. 2007இல் நடந்த பான் அமெரிக்க விளையாட்டுக்களும் இதே போன்று ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.[3][4] பல நிகழிடங்கள் பாராக் கொத்தில் பாரா கொத்து ஒலிம்பிக் பூங்காவில் அமைந்துள்ளன.[2] இருக்கைகளின் எண்ணிக்கைப்படி மிகவும் பெரிய நிகழிடமாக மரக்கானா விளையாட்டரங்கம் உள்ளது. அலுவல்முறையாக இது ஜோர்னலிஸ்டா மாரியோ பில்ஓ விளையாட்டரங்கம் எனப்படுகின்றது. 74,738 பார்வையாளர்கள் அமரக்கூடிய இந்த விளையாட்டரங்கம் அலுவல்முறையான ஒலிம்பிக் விளையாட்டரங்கம் ஆகும். இங்குதான் துவக்க விழாவும் நிறைவு விழாவும் காற்பந்தாட்ட இறுதிப் போட்டியும் நடைபெற்றன.[2] தவிரவும் இரியோ டி செனீரோவிற்கு வெளியே ஐந்து நிகழிடங்களில் காற்பந்தாட்டங்கள் நடைபெற்றன: பிரசிலியா, பெலோ அரிசாஞ்ச், மனௌசு, சவ்வாதோர், சாவோ பாவுலோ.[2]

1900 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குப் பின்னர் முதல் முறையாக கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் துவக்க விழாவும் நிறைவு விழாவும் தடகளப் போட்டிகள் நடக்கும் நிகழிடத்தில் நடத்தப்படவில்லை.

மேற்சான்றுகள்

  1. Rio de Janeiro Elected As 2016 Host City, Copenhagen, Denmark: (IOC), October 2, 2009, http://www.olympic.org/en/content/Media/?articleNewsGroup=-1&articleId=73322, பார்த்த நாள்: December 2, 2009.
  2. ["Archived copy". மூல முகவரியிலிருந்து November 12, 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் June 29, 2015. "Sports and Venues"] (PDF), Rio de Janeiro 2016 Candidate File, 2, (BOC), February 16, 2009, pp. 10–11, "Archived copy". மூல முகவரியிலிருந்து November 12, 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் June 29, 2015., பார்த்த நாள்: December 2, 2009.
  3. "Introduction" (PDF), Rio de Janeiro 2016 Candidate File, 1, London, United Kingdom: (BOC), February 16, 2009, http://urutau.proderj.rj.gov.br/rio2016_imagens/sumario/English/Per%20Theme/Volume%201/Intro_Vol1_eng.pdf, பார்த்த நாள்: May 5, 2009.
  4. Rio 2007 Pan Am Games Get Debriefed Ahead Of 2016 Bid, Toronto, Canada: (GamesBids), March 9, 2008, http://www.gamesbids.com/eng/olympic_bids/rio_2016/1205250762.html, பார்த்த நாள்: May 5, 2009.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.