மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (மூமுக) தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும்.[1] இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர், மறவர், அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு, பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி. எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார்.
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் | |
---|---|
தலைவர் | ஸ்ரீதர் வாண்டையார் |
நிறுவனர் | பிரேம்குமார் வாண்டையார் |
கட்சிக்கொடி | |
![]() |
2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது.[2] 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.[3]
இவற்றையும் பார்க்க
சான்றுகள்
- இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட கட்சிகளின் பட்டியல் PDF வடிவில் (ஆங்கில மொழியில்)
- "[http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2011/stat_TN_May2011.pdf STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2011 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU]". இந்தியத் தேர்தல் ஆணையம் (மே 2011). பார்த்த நாள் 3 பெப்ரவரி 2014.
- "அதிமுகவில் சீட் கிடைக்காத மூவேந்தர் முன்னேற்ற கழகம், திமுகவுக்கு ஆதரவு". தட்சு தமிழ். பார்த்த நாள் 23 ஏப்ரல் 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.