நக்மா

நந்திதா மொராஜி (நர்மதா சாதனா) அல்லது பிரபலமாக நக்மா (இந்தி: नघमा) தமிழ், இந்தி,தெலுங்கு திரைப்பட நடிகையாவார். 1993 -1997 இற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய கதாநாயகியாக இருந்தார்[1]. இவரது தாயார் இஸ்லாம் மதத்தையும், தந்தையார் இந்து மததையும் சேர்ந்தவராவர். இவர் நடிகை ஜோதிகாவின் சகோதரியாவர்.[2] இவர் நடிப்பை பாலிவூட்டில் ஆரம்பித்தார் எனினும் சிலத் திரைப்படங்களுக்குப் பின் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இங்கு இவருக்கு நல்ல வரவேற்புக் கிட்டியது. இவர் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் தேர்ச்சிப் பெற்றவராவார். மேலும் இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், வங்காளி, போஜ்பூரி, பஞ்சாபி, மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[3]

நக்மா

நக்மா
இயற் பெயர் நந்திதா மொராஜி
பிறப்பு திசம்பர் 25, 1974(1974-12-25)
மும்பை, இந்தியா
வேறு பெயர் நர்மதா சாதனா
நடிப்புக் காலம் 1990- தற்போதுவரை

தமிழில் ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்தில் மற்றும் காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துப் புகழ் பெற்றார். காதலன் திரைப்படத்துக்காக இவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

அரசியல் அவதாரம்

2014ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதில் போட்டியிட்டார்.[4]

நடித்துள்ள திரைப்படங்கள்

நடித்துள்ள தமிழ் திரைப்படங்களின் பட்டியல் கீழ்வருமாறு[5]

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
1994காதலன்ஸ்ருதிதமிழ்பிலிம்பேர் விருது
1995பாட்சாபிரியாதமிழ்
1995ரகசியப் போலிஸ்தமிழ்
1995வில்லாதி வில்லன்ஜானகிதமிழ்
1996லவ் பேர்ட்ஸ்தமிழ்
1996மேட்டுக்குடிதமிழ்
1997ஜானகிராமன்இந்துதமிழ்
1997பெரிய தம்பிசெல்விதமிழ்
1997பிஸ்தாவெண்ணிலாதமிழ்
1997அரவிந்தன்தமிழ்
1998வேட்டிய மடிச்சு கட்டுதமிழ்
2001சிட்டிசன்சிபிஐ அதிகாரிதமிழ்
2001தீனாகுத்துப்பாடல் நடனக்காரியாகதமிழ்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.