வி. ச. காண்டேகர்
வி. ச. காண்டேகர் அல்லது வி. எஸ். காண்டேகர் (Vishnu Sakharam Khandekar, தேவநாகரி: विष्णु सखाराम खांडेकर, சனவரி 19, 1898 – செப்டம்பர் 2, 1976) மகாராட்டிரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர். ஞானபீட விருது பெற்ற முதல் மராட்டிய எழுத்தாளர். இவர் எழுதிய யயாதி எனும் நூல், 1960ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. இவரது புதினங்களில் பல கா. ஸ்ரீ. ஸ்ரீ தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
விஷ்ணு சாகரம் காண்டேகர் | |
---|---|
![]() வி. ச. காண்டேகரின் அஞ்சல் தலை | |
பிறப்பு | சனவரி 19, 1889 சாங்கிலி, மகாராட்டிரம், இந்தியா |
இறப்பு | செப்டம்பர் 2, 1976 87) | (அகவை
பணி | எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | யயாதி, உல்கா (எரிநட்சத்திரம்) |
விருதுகள் | ஞானபீட விருது, சாகித்திய அகாதமி விருது |
இளமைக் காலம்
காண்டேகர் மகாராட்டிரத்தைச் சேர்ந்த சாங்க்லி என்னும் ஊரில் பிறந்தார். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.
ஆசிரியராகவும் எழுத்தாளராகவும்
1920-இல் கொங்கன் பகுதியில் அமைந்துள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1938 வரை ஆசிரியராக பணிபுரிந்தார். ஆசிரியராக இருக்கும் போதே மராத்திய இலக்கியத்தை பல்வேறு வடிவங்களுக்கு எடுத்துச் சென்றார். தனது வாழ்நாளில், இவர் 16 நாவல்களும், 6 நாடகங்களும், சுமார் 250 சிறுகதைகளும், 50 உருவகக் கதைகளும், 100 கட்டுரைகளும் மற்றும் 200-க்கும் மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
விருதுகள்
1941-ம் ஆண்டு சோலாப்பூரில் நடைபெற்ற மராத்தி இலக்கிய மாநாட்டில், காண்டேகர் மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1968-ம் ஆண்டு இந்திய அரசாங்கம், இவருக்கு இலக்கியத்திறகான பத்ம பூசன் விருது வழங்கி கவுரவப்படுத்தியது. இவர் எழுதிய யயாதி எனும் நூல் 1960-இல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1998-ம், ஆண்டு இவருடைய உருவம் பதித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
படைப்புகள்
காண்டேகர் தன்னுடைய யயாதி நாவலுக்காக மகாராட்டிர மாநில விருது (1960), சாகித்ய அகாதமி விருது (1960), மற்றும் ஞானபீட விருது (1974) என மூன்று பெரிய விருதுகளை வென்றார்.[1]
காண்டேகரின் பிற புதினங்கள்:
- ஹ்ருதயாச்சி ஹக் (हृदयाची हाक) (1930)
- கஞ்சன் முருகா (कांचनमृग) (1931)
- உல்கா (उल्का) (1934)
- டோம் மனே (दोन मने) (1938)
- ஹிர்வா சஃபா (हिरवा चाफ़ा) (1938)
- டோன் துருவ் (दोन धृव) (1934)
- Rikāmā Dewhārā (रिकामा देव्हारा) (1939)
- Pahile Prem (पहिले प्रेम) (1940)
- Kraunchawadh (क्रौंचवध) (1942)
- Jalalelā Mohar (जळलेला मोहर) (1947)
- Pāndhare Dhag (पांढरे ढग) (1949)
- Amrutawel (अमृतवेल)
- Sukhāchā Shodh (सुखाचा शोध)
- அஷ்ரு (अश्रू))
- சோனேரி சுவப்னே பங்காலேலி (सोनेरी स्वप्ने भंगलेली)
பிற ஆக்கங்கள்
- अभिषेक(அபிஷேக்)
- अविनाश (அவினாஷ்)
- गोकर्णीची फुले (Gokarnahi Fule)
- ढगाआडचे चांदणे (Dhagaadache Chandne)
- दवबिंदू (Davbindu)
- नवी स्त्री (நவி ஸ்த்ரீ)
- प्रसाद (பிரசாத்)
- मुखवटे (முகாவடே)
- रानफुले (ரான்ஃபுலே)
- विकसन (விகாசன்)
- क्षितिजस्पर्श (Shitijsparsh)
திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும்
- சாயா மராத்தி (1936)
- ஜுவாலா மராத்தி மற்றும் இந்தி (1938)
- தேவதா மராத்தி (1939)
- அம்ருத் மராத்தி மற்றும் இந்தி (1941)
- தர்மபத்னி மராத்தி மற்றும் இந்தி (1941)
- பர்தேசி மராத்தி (1953)
காண்டேகர், மராத்திய திரைப்படமான லக்னா பஹாவே கரூன் (1940) திரைப்படத்திற்கு வசனமும் திரைக்கதையும் எழுதியுள்ளார். [2]
மொழிபெயர்ப்புகள்
- யயாதி நூல் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காண்டேகரின் நூல்கள்
காண்டேகரின் பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர் கா. ஸ்ரீ. ஸ்ரீ. காண்டேகரின் பல நூல்கள் முதன் முதலாக தமிழில் வெளியாயின பிறகே மூலமொழியில் வெளியாயின[3].