வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி

வட அயர்லாந்து தேசிய கால்பந்து அணி (Northern Ireland national football team) என்பது வட அயர்லாந்தைப் பிரதொநிதித்துவப் படுத்தும் பன்னாட்டு கால்பந்து அணியாகும். 1882 முதல் 1921 வரை அயர்லாந்து முழுவதும் ஒரே அணியில் "அயர்லாந்து தேசிய கால்பந்து அணி என்ற பெயரில் அயர்லாந்து கால்பந்துச் சங்கத்தின் (IFA) ஆதரவில் விளையாடின. 1921 ஆம் ஆண்டில் ஐரிய சுயாதீன நாடு உருவான போது, அயர்லாந்து கால்பந்துச் சங்கம் வட அயர்லாந்துக்கு மட்டும் உரியதாக சட்டமியற்றப்பட்டது. ஆனாலும், தேசிய கால்பந்து அணி ஒரே அணியில் "அயர்லாந்து" என்ற பெயரில் 1950 வரை விளையாடி வந்தது. அயர்லாந்து என்ற பெயர் 1970கள் வரை புழக்கத்தில் இருந்தது.[1][n 1][2][3] அயர்லாந்துக் குடியரசின் கால்பந்து சங்கம் (FAI) தனியான அயர்லாந்து தேசிய காற்பந்து அணியை உருவாக்கி விளையாடி வருகிறது.

வட அயர்லாந்து
கூட்டமைப்புஅயர்லாந்து கால்பந்துச் சங்கம் (IFA)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தன்னக விளையாட்டரங்கம்வின்சர் பூங்கா
பீஃபா குறியீடுNIR
பீஃபா தரவரிசை25 1 (2 சூன் 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை25 (சூன் 2016)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை129 (செப்டம்பர் 2012)
எலோ தரவரிசை62 (23 பெப்ரவரி 2016)
அதிகபட்ச எலோ5 அல். 14 (1882 அல். மே 1986)
குறைந்தபட்ச எலோ114 (11 அக்டோபர் 2013)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
Official:
 அயர்லாந்து 0–13 இங்கிலாந்து 
(பெல்பாஸ்ட்; 18 பெப்ரவரி 1882)
வட அயர்லாந்தாக:
 வட அயர்லாந்து 1–3 இசுக்காட்லாந்து 
(பெல்பாஸ்ட்; 3 அக்டோபர் 1953)
பெருத்த வெற்றி
 அயர்லாந்து 7–0 வேல்சு 
(பெல்பாஸ்ட்; 1 பெப்ரவரி 1930)
பெருத்த தோல்வி
 அயர்லாந்து 0–13 இங்கிலாந்து 
(பெல்பாஸ்ட்; 18 பெப்ரவரி 1882)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1958 இல்)
சிறந்த முடிவுகாலிறுதிகள், 1958, 1982
அரோப்பிய வாகையாளர்
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2016 இல்)
சிறந்த முடிவுTBD

ஒலிம்பிக் போட்டிகளில் வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் அணியில் விளையாடி வருகிறது. ஏனைய பன்னாட்டுப் போட்டிகளில் தனியான அணியாக விளையாடுகிறது.

வட அயர்லாந்து மூன்று உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்குபற்றியது. 1958, 1982 போட்டிகளில் காலிறுதிக்குத் தகுதி பெற்றது. யூரோ 2016 போட்டியில் முதன் முறையாக ஐரோப்பியப் போட்டிகளில் பங்குபெறத் தகுதி பெற்றது.

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

  1. அயர்லாந்து என்ற பெயரில் விளையாடிய கடைசி ஆட்டம் 1978 இல் இசுக்கொட்லாந்துக்கு எதிராக விளையாடியதாகும்.

மேற்கோள்கள்

  1. Matthew Taylor (2008). The Association Game: A History of British Football. Harlow:Pearson Education Ltd.
  2. Ireland v Scotland programme
  3. Match programmes 1972-75

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.