லோத்தல்
லோத்தல் சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களில் ஒன்றாகும். ஹரப்பா பண்பாட்டின் தொடர்ச்சியான லோத்தல் நகரத்தின் அழிபாடுகள் தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதன் தோற்றத்தின் காலம் கி.மு 3700 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தைச் சேர்ந்த, இந்தியாவிலுள்ள முக்கியமான தொல்லியல் களமாக இது கருதப்படுகின்றது.[1] 1954 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விடத்தில், 1954ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு முடிய அகழ்வாய்வுகள், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் நடத்தப்பட்டது.[2][3]
தோலத்தல் | |
---|---|
![]() ஹரப்பா தொல்லியல் களம், லோத்தல், குசராத்து | |
![]() ![]() | |
இருப்பிடம் | லோத்தல், குசராத்து |
ஆயத்தொலைகள் | 22°31′17″N 72°14′58″E |
வகை | Settlement |
வரலாறு | |
கட்டப்பட்டது | சுமார் கி மு 3700 |
கலாச்சாரம் | சிந்துவெளி நாகரிகம் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1954–1963 |
நிலை | சிதைந்த நகரம் |
உரிமையாளர் | பொது |
மேலாண்மை | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
பொது அனுமதி | ஆம் |

அமைவிடம்
அகமதாபாத் மாவட்டத்தின் தோல்கா தாலுகாவில் உள்ள சரக்வாலா கிராமத்தின் அருகில் அமைந்துள்ளது. அகமதாபாத் நகரத்திலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் லோத்தல் அமைந்துள்ளது.
அருங்காட்சியகம்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம், லோத்தல் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களைக் கொண்டு அகமதாபாத் நகரத்தில் லோத்தல் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைத்துள்ளது [3][4] இந்தியத் தொல்லியல் ஆய்வகம்