ராம நாராயணன்
ராம நாராயணன், (ஏப்ரல் 3, 1949 - சூன் 22, 2014) இந்தியத் திரைத்துறையைச் சார்ந்தவர். தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர். தயாரிப்பு பணிகளையும் செய்துள்ளார். இவரது திரைப்படங்களில் பலவற்றில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. [2] 36 ஆண்டுகளில் 125 திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளது ஓர் உலக சாதனையாகும்.[3] [4] தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். இவர் ஒரு மலேய மொழிப் படத்தை இயக்கியுள்ளார்.[5] சில திரைப்படங்களுக்கு கதையும் எழுதினார்.
இராம நாராயணன் [1] | |
---|---|
![]() | |
பிறப்பு | ஏப்ரல் 3, 1949 |
இறப்பு | சூன் 22, 2014 65) | (அகவை
மற்ற பெயர்கள் | ராமநாராயணன், ராம் நாராயண் |
பணி | இயக்குநர், தயாரிப்பாளர் |
பெற்றோர் | இராமசாமி மீனாட்சி ஆச்சி |
வாழ்க்கைத் துணை | இராதா (மறைவு) |
திரைப்படங்கள்
- குட்டிப் பிசாசு (தமிழ், தெலுங்கு, கன்னடம்), சுமை, ஆடிவெள்ளி, சிவப்பு மல்லி, சிங்கக்குட்டி, வேங்கையின் மைந்தன், சிவந்த கண்கள், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கந்தா கடம்பா கதிர்வேலா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ஆகிய திரைப்படங்களில் பணி புரிந்துள்ளார்.
தயாரித்தவை
இயக்கியவை
மரணம்
இராம நாராயணன் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சூன் 22, 2014 அன்று சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூரில் மரணமடைந்தார். [6]
சான்றுகள்
- http://filmcircle.com/director-producer-rama-narayanan/
- புதிய படங்களில் மிருகங்களை பயன்படுத்த முடியவில்லை - ராம நாராயணன்
- ”கல்பனா” என் 125வது படம் - ராம நாராயணன்
- http://cinema.dinamalar.com/tamil-news/9162/cinema/Kollywood/Malayan-language-film-directed-by-Rama-Narayanan!.htm
- http://cinema.dinamalar.com/tamil-news/9162/cinema/Kollywood/Malayan-language-film-directed-by-Rama-Narayanan!.htm
- "சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் இயக்குநர் ராம நாராயணன் மரணம்; விமானம் மூலம் உடல் சென்னை கொண்டுவரப்படுகிறது". தினத்தந்தி (23 சூன் 2014). பார்த்த நாள் 23 சூன் 2014.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.