றசல் ஆர்னோல்ட்

றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட் (Russel Arnold, பிறப்பு: அக்டோபர் 25, 1973, கொழும்பு) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் 44 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 180 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

றசல் ஆர்னோல்ட்
Russel Arnold
இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரசல் பிரேமகுமாரன் ஆர்னோல்டு
பட்டப்பெயர் குப்பியா, மயில்[1]
வகை மட்டையாளர், வர்ணனையாளர்
துடுப்பாட்ட நடை இடக்கைத் துடுப்பாளர்
பந்துவீச்சு நடை வலக்கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 68) 19 ஏப்ரல், 1997:  பாக்கித்தான்
கடைசித் தேர்வு 1 சூலை, 2004:  ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 91) 6 நவம்பர், 1997:  தென்னாப்பிரிக்கா
கடைசி ஒருநாள் போட்டி 28 ஏப்ரல், 2007:   ஆத்திரேலியா
அனைத்துலகத் தரவுகள்
தேஒநாஇ20ப
ஆட்டங்கள் 44 180 1
ஓட்டங்கள் 1,821 3,950 7
துடுப்பாட்ட சராசரி 28.01 35.26 7.00
100கள்/50கள் 3/10 1/28 -/-
அதியுயர் புள்ளி 123 103 7
பந்துவீச்சுகள் 1,334 2,157 -
விக்கெட்டுகள் 11 40 -
பந்துவீச்சு சராசரி 54.36 43.47 -
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு 3/76 3/47 -
பிடிகள்/ஸ்டம்புகள் 51/- 48/- -/-

2 மே, 2016 தரவுப்படி மூலம்: கிரிக்கின்ஃபோ

விளையாட்டு வரலாறு

1997ல் முதன்முதலாக டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாட ஆரம்பித்த இவர், அதே வருடத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார். தொடக்கத்தில் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஆர்னோல்ட் பின்னர் 5ம், 6ம் துடுப்பாட்டக்காரராக விளையாடி வருகிறார். ஆட்டத்தின் மிகச்சிக்கலான நேரத்திலும் கலங்காமல் விளையாடக்கூடியவர் என்ற பெயரைக் கொண்டவர். ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணியை பலமுறை தனது அமைதியான ஆட்டத்தினால் காப்பாற்றியிருக்கிறார். சிறந்த களத்தடுப்பாட்டக்காரரும், அவசியமான நேரங்களில் திறமையாக பந்து வீசக்கூடியவருமாவார். மெதடிஸ்த கிறிஸ்தவரான இவரும் முத்தையா முரளிதரனும் இலங்கை அணியில் தற்போதுள்ள இரண்டு தமிழ் வீரர்களாகும்.

புள்ளி விபரம்

  • டெஸ்ட் ஆட்டத்தில் இவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை - 123 ( 1999ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக லாகூரில் நடந்த ஆட்டத்தில்)
  • ஒருநாள் ஆட்டத்தில் இவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை - 103 ( 1999ல் சிம்பாப்வே அணிக்கு எதிராக புலவாயோ, சிம்பாப்வேயில் நடந்த ஆட்டத்தில்)
  • இதுவரை டெஸ்ட் ஆட்டங்களில் 11 விக்கற்றுகளையும், ஒருநாள் ஆட்டங்களில் 38 விக்கற்றுகளையும் தனது பந்துவீச்சினால் கைப்பற்றியிருக்கிறார்.

2007 உலகக்கிண்ணத் தொடரில்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் முன்னணி வீரர்கள் எல்லோரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து போய்விட, இவரும் திலகரட்ண டில்சானும் இணந்து 97 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணியின் ஓட்டத்தொகையை ஓரளவு உயர்த்தினார்கள்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.