மேகா ஆகாஷ்

மேகா ஆகாஷ் (26 அக்டோபர் 1995) என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். 2017 இல் இருந்து லை (2017), வந்தா ராஜாவாதான் வருவேன் (2019), பேட்ட (2019) போன்ற தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.[1]

மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷ் (ஏப்ரல் 2018 இல்)
பிறப்புமேகா
26 அக்டோபர் 1995 (1995-10-26)
காரியாபட்டி, தமிழ்நாடு
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2017 – இன்று வரை

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

மேகா அக்டோபர் 26, 1995 இல் தமிழ்நாட்டில் உள்ள காரியாபட்டி என்ற ஊரில் பிறந்தார். இவர் 2014 இல் ஒரு பக்கா கதை என்னும் திரைபடத்தில் நடித்துத் தனது நடிப்பு தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் இந்த திரைப்படம் வெளிவர தாமதாமானதால். 2017 இல் லை என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் நித்தின் குமாருக்கு ஜோடியாக சைத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து இயக்குனர் கிருஷ்ண சைதன்யா என்பவர் இயக்கி 2018 இல் வெளியான சல் மோகன் ரங்கா என்ற திரைப்படத்தில் மறுபடியும் நடிகர் நித்தின் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.[2]

2019 இல் காதல் திரைப்படமான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் மேனன் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். 2016 ஆம் ஆண்டில் சென்னையில் இந்தப் படப் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன. தனுஷ் மாரி 2 என்ற திரைபபடத்தை முடிக்கவேண்டியுள்ளதால் அதற்கு முன் இதில் நேரம் செலுத்த முடியாத நிலையில் தயாரிப்புப் பணிகள் தாமதமாகின. அதனால் இவ் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே அதிரடித் திரைப்படமான பேட்ட முதலில் வெளியானது.[3] இதனால் இது இவரின் முதல் தமிழ்பாடமாகும். இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் என்பவர் இயக்க, ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, திரிசா, சசிக்குமார், பாபி சிம்ஹா போன்ற பல தமிழ் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். அணு என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இதே ஆண்டில் அத்தாரிண்டிகி தாரேதி என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் மறுதயாரிப்பு திரைப்படமான சுந்தர் சி.யின் குடும்ப நகைச்சுவைத் திரைப்படமான வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்காவிடாலும் இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது. 2017 இல் இவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட அதிரடி திரில்லர் திரைப்படமான பூமராங் என்ற திரைப்படமும் 2019 இல் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஜிகி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க, ஆர். கண்ணன் என்பவர் இயக்கியுள்ளார்.

சேட்டிலைட் சங்கர் என்ற அதிரடித் திரைப்படமான இந்தி மொழித் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இதில் நடிகர் சூரஜ் பஞ்சோலி என்பவர் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக பர்மிளா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.[4][5] இந்த திரைபபடம் நவம்பர் 8, 2019 வெளியாகவுள்ளது.

தற்பொழுது தெலுங்கு மொழித் திரைப்படமான மனு சைத்ரா என்ற திரைபபடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் புதுமுக நடிங்கர் சிவா கண்டுகுறி என்பவருடன் ஜோடியாக நடிக்கின்றார். அதை தொடர்ந்து யாதும் ஓரே யாவரும் கேளிர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யபப்ட்டுள்ளார்.

திரைப்பட வரலாறு

இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு திரைப்படம் எழுத்து மொழி குறிப்புக்கள்
2017 லை சைத்ரா தெலுங்கு தெலுங்கு அறிமுக
2018 சல் மோகன் ரங்கா மேகா தெலுங்கு
2019 பேட்ட அனு தமிழ் தமிழ் அறிமுக
2019 வந்த ராஜாவதான் வருவேன் மாயா தமிழ்
2019 பூமராங் கிகி தமிழ்
2019 எனை நோக்கி பாயும் தோட்டா லேகா தமிழ் தயாரிப்பிற்குப்பின்
2019 ஒரு பக்கா கதை TBA தமிழ் தாமதமாகியுள்ளது
2019 சேட்டிலைட் சங்கர் TBA இந்தி தயாரிப்புக்குப் பிந்தைய நிலை. இந்தி அறிமுகம்
2019 மனு சைத்ரா TBA தெலுங்கு படப்பிடிப்பில்
2019 யாதும் ஓரே யாவரும் கேளிர் TBA தமிழ் படப்பிடிப்பில்

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.