மூன்றாம் பிறை (திரைப்படம்)

மூன்றாம் பிறை 1982ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் பிறை
இயக்கம்பாலுமகேந்திரா
தயாரிப்புஜி. தியாகராஜன்
ஜி. சரவணன்
கதைபாலுமகேந்திரா
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
சில்க் ஸ்மிதா
ஒய். ஜி. மகேந்திரன்
ஒளிப்பதிவுபாலுமகேந்திரா
படத்தொகுப்புடி. வாசு
கலையகம்சத்ய ஜோதி படங்கள்
விநியோகம்சத்ய ஜோதி படங்கள்
வெளியீடு19 பெப்ரவரி 1982 (1982-02-19)
ஓட்டம்143 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் 330 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடிய காதல்படம்மாகும். இப்படம் தெலுங்கு மொழியில் 'வசந்த கோகிலா' எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. 1983 ஆண்டில் இத்திரைப்படத்தை பாலுமகேந்திரா அவர்கள் இந்தி மொழியிலும் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் 'சந்மா' எனும் பெயரில் மீண்டும் எடுத்து வெளியிட்டார்.

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பணியாற்றி கடைசி திரைப்படம் இதுவாகும். "கண்ணே கலைமானே" எனும் பாடல் தான் அவர் இறப்பதற்கு முன்பாக எழுதிய கடைசி பாடலாகும்.

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

விபத்தின் காரணமாக மன நோயாளியாக்கப்படும் விஜி (ஸ்ரீதேவி) பின்னர் தவறுதலாக விலைமாதுவாக விற்கப்படுகின்றார். அவரை அங்கு சந்தித்துக் கொள்ளும் நல்ல மனம் கொண்ட சீனுவாசன் (கமல்ஹாசன்) எனும் ஆசிரியரால் காப்பாற்றப்பட்டு பின் அவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். பின்னர் விஜிமீது காதல் கொள்ளும் சீனுவாசன், விஜிக்கு மன நோயின் பாதிப்பு இல்லாமல் போனபின் ரயில் நிலையத்தில் விஜியிடம் பேச இயலும் பல முயற்சிகள் செய்தும் அவரால் பேச முடியாது போகவே விஜியும் அவரைப் பைத்தியக்காரன் என்று பார்வையிடவும் திரைக்கதை முடிவு பெறுகின்றது.

நடிகர்கள்

பாடல்கள்

மூன்றாம் பிறை
ஒலிப்பதிவு by
வெளியீடு1982
இசைப் பாணிதிரைப்படத்தின் ஒலிப்பதிவு
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

இளையராஜா அவர்கள் இப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார். தமிழ் பாடல் வரிகள் கண்ணதாசன், வைரமுத்து மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதியுள்ளனர். தெலுங்கு மொழியில் பாடல் வரிகள் மயிலாவரப்பு கோபி மற்றும் வெட்டுரி சுந்தரராமா மூர்பி ஆகியோர் எழுதியுள்ளனர். தெலுங்கில் இப்படம் 'வசந்த கோகிலா' எனும் பெயரில் வெளிவந்தது.

எண்.பாடல்பாடகர்கள்பாடலாசிரியர்நீளம்
1கண்ணே கலைமானேகே. ஜே. யேசுதாஸ்கண்ணதாசன்04:13
2கண்ணே கலைமானே (சோகம்)கே. ஜே. யேசுதாஸ்01:09
3நரி கதைகமல்ஹாசன், ஸ்ரீதேவிவைரமுத்து04:05
4பொன்மேனி உருகுதேஎஸ். ஜானகிகங்கை அமரன்04:35
5பூங்காற்றேகே. ஜே. யேசுதாஸ்கண்ணதாசன்04:22
6வானெங்கும் தங்கஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகிவைரமுத்து04:34

விருதுகள்

விருது விழா வகை வேட்பாளர் முடிவு மேற்.
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா 30வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா சிறந்த நடிகர் கமல்ஹாசன் style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறந்த ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் 28வது தென்னிந்திய பிலிம்பேர் விருது விழா சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் பாலுமகேந்திரா style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
தமிழக அரசு திரைப்பட விருதுகள் 1982ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு விருது வழங்கும் விழா சிறந்த திரைப்படம் (மூன்றாம் பரிசு) மூன்றாம் பிறை style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறந்த நடிகர் கமல்ஹாசன் style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறந்த நடகை ஸ்ரீதேவி style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறந்த பாடகர் (ஆண்) கே. ஜே. யேசுதாஸ் style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறந்த பாடகர் (பெண்) எஸ். ஜானகி style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.