முகவெலும்பு
முகவெலும்புகள் (Facial bones) எனப்படுபவை மண்டையோட்டுடன் சேர்ந்து தலையோட்டை உருவாக்கும் எலும்புகள் ஆகும்[1]. இவை தலையோட்டின் முன், கீழ்ப் பகுதியில் அமைந்திருக்கும் எலும்புகளாகும். இவற்றுள் வாய்ப்பகுதியில் இருக்கும் முக்கிய எலும்பான தாடையெலும்பும் அடங்கும். முக எலும்புகள் என்பவை முகத்தில் அமைந்ததுள்ள 14 எலும்புகள் ஆகும்.
முகவெலும்புகள் | |
---|---|
![]() 14 முகவெலும்புகள். | |
![]() 14 முகவெலும்புகள் மண்டையோட்டுன்
கரும்பச்சை: கன்ன எலும்புக (2)
| |
விளக்கங்கள் | |
இலத்தீன் | ossa faciei, ossa facialia |
அடையாளங்காட்டிகள் | |
ஹென்றி கிரேயின் | p.156 |
TA | A02.1.00.008 |
FMA | 53673 |
Anatomical terms of bone |
மனித முகவெலும்புகள்
மனித மண்டையோட்டிற்கு பெரும் ஆதாரங்களாக கீழ்காணும் 14 முகவெலும்புகளும் விளங்குகின்றன:[1][2][3]
- கீழ்மூக்கு சங்கெலும்பு (Inferior nasal concha) - 2
- கண்ணீர்க் குழாய் எலும்பு (Lacrimal bones) - 2
- கீழ்த்தாடை எலும்பு (Mandible) - 1
- மேல்தாடை எலும்பு (Maxilla) - 2
- மூக்கெலும்பு (Nasal bones) - 2
- அண்ணவெலும்பு (Palatine bones) - 2
- மூக்குச்சுவர் எலும்பு (Vomer) - 1
- கன்ன எலும்பு (Zygomatic bones) - 2
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.