மிளகா (திரைப்படம்)

மிளகா என்பது 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ரவி மரியா இயக்கியுள்ளார். நடிகர் நடராஜ் சுப்பிரமணியம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த படம் 25 ஜூன் 2010 அன்று வெளியானது. இத்திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளானது.[1]

மிளகா
இயக்கம்ரவி மரியா
தயாரிப்புசியாம் சுந்தர்
சுஜிதா
கதைரவி மரியா
இசைசபேஸ் முரளி
நடிப்புநடராஜன் சுப்பிரமணியம்
பூங்கோடி
ரவி மரியா
சிங்கம்புலி
ஒளிப்பதிவுவி. பாலாஜி ரங்கா
படத்தொகுப்புபைசில்
கலையகம்நடராஜன் ஆர்ட்ஸ்
விநியோகம்விளையாட்டு. கிரியேசன்ஸ்
வெளியீடுசூன் 25, 2010 (2010-06-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

கதை சுருக்கம்

ஊர்த்திருவிழாவில் நாயகி பூங்கொடியின் இடுப்பை நாயகன் நட்ராஜ் கிள்ளி விடுகிறார். நாயகி பார்க்கையில் ரவி மரியா பின்னால் இருந்ததால், நாயகி ரவிமரியாவை அடித்து விடுகிறார். ரவி மரியா பிரபலமான ரவுடி சகோதரர்களில் ஒருவர். தன்னை அடித்து பூங்கொடியை திருமணம் செய்ய போராடுகிறார்.

இறுதியில் நாயகன் நட்ராஜூம், நாயகி பூங்கொடியும் இணைகிறார்களா என்பதே கலையாகும்.[2]

தயாரிப்பு

ஆசை ஆசையாய் (2002) திரைப்படத்திற்குப் பிறகு ரவி இயக்கிய இரண்டாவது திரைப்படம் மிளாகாவாகும். இயக்குநர்கள் சிங்கம் புலி, ஜெகன்னத், நந்த பெரியசாமி மற்றும் ஜி.எம்.குமார் ஆகியோர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.[3]

ஒலிப்பதிவு

சபாஷ் முரளி இசையமைத்துள்ளார்.[4]

  • தவணியே - பாலாஜி
  • நீ சிரிச்சுப்பார்க்கற - கிருஷ்ணராஜ், கங்கா
  • கிறுக்கு பையா - சத்தியன், பிரசந்திணி
  • எங்கே வந்தடி - ஜனனி, வினீத், கீதம்
  • சாமி வந்துருச்சு - ஸ்ரீராம், சபேஷ்

ஆதாரங்கள்

  1. "Archived copy". மூல முகவரியிலிருந்து 26 March 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-03-26.
  2. மதுரையின் ரவுடி கும்பல் சகோதரர்களில் ஒருவர் ரவிமரியா, ஊர்த்திருவிழாவில், ஹீரோடு நட்ராஜ், ஹீரோனியினிடம் செய்யும் சீண்டலுக்கு தவறுதலாக ஹீரோயின் பூங்கொடி ரவிமரியாவை அடித்து விடுகிறார்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.